Pottukadalai Peda Recipe: 10 நிமிடத்தில் சூப்பர் ஸ்வீட் ரெடி.. பொட்டுக்கடலை பேடா..!

பொட்டுக்கடலை கேக் ரெசிபி.

Pottukadalai Peda (Photo Credit: YouTube)

மார்ச் 15, சென்னை (Kitchen Tips): மிக எளிமையாக ஒரு சில நிமிடங்களில் தயாரிக்கும் இந்த இனிப்பு , புரதத்தின் ஆதாரமாக உள்ளது. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த இனிப்பை தயார் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை - 2 கப்

நாட்டுச் சர்க்கரை - 1 கப்

உருக்கிய நெய் - 1/4 கப்

ஏலத்தூள் - 2 ஸ்பூன்

நறுக்கின பாதாம் துண்டுகள் - 3 டேபிள் ஸ்பூன் Elon Musk's SpaceX Rocket: சீறிப்பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்.. எலன் மஸ்கின் அதிரடி சம்பவம்..!

செய்முறை: மிக்ஸி ஜாரில், பொட்டுக்கடலை, நாட்டுச் சர்க்கரையை சேர்த்து நன்கு மைய அரைக்கவும். அரைத்ததை நன்கு சலித்து ஒரு பாத்திரத்தில் போடவும். சலித்த மாவில், நறுக்கின பாதாம் துண்டுகள்,ஏலத்தூள் சேர்த்து நன்கு கலந்து, உருக்கிய நெய்யை சிறிது சிறிதாக ஊற்றவும்.

பிறகு விருப்பமான அளவிற்கு உருட்டி, நடுவில் குழி செய்து, பாதாம் துண்டுகளை நடுவில் வைத்து அலங்கரிக்கவும். இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான, பொட்டுக்கடலை பேடா (Pottukadalai Peda) தயார்.