Beetroot Rasam Recipe: பீட்ரூட் ரசம் மிக சுவையாக செய்வது எப்படி? சமையல் ராணியாக தெரிஞ்சிக்கோங்க..!
பீட்ரூட் ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
ஜூலை 29, சென்னை (Cooking Tips): உடலுக்கு பல வகைகளில் ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும் வல்லமைக் கொண்டது ரசம். ஆனால் நம்மில் பலருக்கு ரசமா, இந்த விஷப் பரிட்சை வேண்டாமே? என அலறி அடித்து ஓடிவிடுவோம். புளி, தக்காளி, சீரகம், மிளகு சேர்த்து வழக்கம் போல் செய்யும் ரசத்தை வெறுக்கும் நபர்களுக்காகவே, நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்துக்கள் அதிகம் கொண்டுள்ள பீட்ரூட்டை வைத்து, பீட்ரூட் ரசம் (Beetroot Rasam) செய்துக்கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட்- 1
தக்காளி- 1
சீரகம்- 1டீஸ்பூன்
மிளகு- 1/2டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
உப்பு- தேவையான அளவு
தேங்காய் எண்ணெய்- 1டீஸ்பூன்
கடுகு- 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை- 10 Ellu Kuzhambu Recipe: சத்தான எள்ளு குழம்பு செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
செய்முறை: பீட்ரூட்டை தோல் உரித்து நறுக்கி வைக்கவும். பின்னர் தக்காளி, பீட்ரூட் துண்டுகள், சீரகம், மிளகு சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும். இவை எல்லாம் ஒரு வானலியில் சேர்த்து, உப்பு கலந்து நன்கு கொதிக்கவிடவும்.
பின்னர் மற்றொரு வானலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் தாளித்து ரசத்தில் சேர்க்கவும். அதில் பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவவும். இப்போது மிகவும் சுவையான,சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் ரசம் சுவைக்கத்தயார்.