Chutney Served with Hair: சட்னியில் கிடந்த ஒரு இன்ச் தலைமுடிக்கு அபராதம் ரூ.5000... அதிரடி காட்டிய உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.!
உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு மாநிலங்களில் தங்களின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி இருப்பதன் எதிரொலியாக, பல இடங்களில் செயல்பட்டு வரும் ஹோட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றன.
ஜூன் 13, ஹைதராபாத் (Hyderabad News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், ஏ.எஸ் ராவ் நகர் பகுதியில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் உள்ளூரை சேர்ந்த ஷிண்கடே உமேஷ் குமார் என்ற சமூக ஆர்வலர், தனது குடும்பத்துடன் உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு குடும்பத்தினர் அனைவரும் உணவு வாங்கி சாப்பிட்டு இருக்கின்றனர்.
சட்னியில் தலைமுடி:
அச்சமயம், உமேஷ் குமார் தனக்கு இட்லி மற்றும் தோசை ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு உணவு பரிமாறப்பட்டுள்ளது. அதனுடன் தேங்காய் சட்னியும் பரிமாறப்பட்ட நிலையில், அதில் ஒரு இன்ச் அளவிலான தலை முடி கிடந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சமூக ஆர்வலர் உமேஷ், தனது செல்போனில் அதனை புகைப்படம் எடுத்துள்ளார். IND Vs USA: நின்று ஆடிய சூரியகுமார் - சிவம் ஜோடி.. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அசத்தல் வெற்றி.!
உணவு பாதுகாப்புத்துறையிடம் புகார்:
பின் உணவகத்தை சேர்ந்த நபர்களிடம் விபரத்தை கூறியபோது சரிவர பதில் இல்லை. இதனையடுத்து, உமேஷ் குமார் சரக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தனது சமூக வலைதள பக்கம் மற்றும் உணவுப்பாதுகாப்புத்துறையின் வாட்சப் புகார் செல்போனுக்கும் அதனை அனுப்பி வைத்துள்ளார். இவரின் கோரிக்கையை ஏற்று உடனடியாக புகார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.
ரூ.5000 அபராதம் வசூல்:
புகாரின் பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சட்னியில் முடி கிடந்தது உறுதியாகவே, அதிகாரிகள் ரூ.5000 அபராதம் விதித்து தனியார் உணவகத்திற்கு உத்தரவிட்டனர்.இத்தொகையை வசூல் செய்துகொண்ட அதிகாரிகள், மேற்படி எதிர்காலத்தில் இவ்வாறான விஷயங்கள் நடந்தால் கடைக்கான உரிமம் ரத்து செய்ய நேரிடும் எனவும் கண்டிப்புடன் எச்சரித்து வந்தனர்.