Kambu Adhirasam Recipe: தீபாவளி ஸ்பெஷல்! கம்பு அதிரசம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தீபாவளியை முறுக்கு, மிக்சர், ஜாமூன், இவற்றுடன் மட்டுமே நிறுத்தி விடாமல் சிறு தானியத்தில் சில இனிப்பு வகைகளையும் செய்து இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம்.
அக்டோபர் 25, சென்னை (Kitchen Tips): தீபாவளி வரப் போது ட்ரஸ் எடுத்தாச்சா, பட்டாசு வாங்கியாச்சா, என்ற கேள்வியுடன் இப்போது தீபாவளிக்கு என்ன என்ன இனிப்பு செய்யலாம் என்ற கேள்வியையும் சேர்த்துக்கொள்வோம். முன்பெல்லாம் தீபாவளி வந்து விட்டால் இரண்டு வாரத்திற்கு முன்பே பலகாராத்திற்கான முன்னேற்பாடுகள் செய்யத் தொடங்கி விடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் தீபாவளியன்று கடைக்கு சென்று இனிப்பு பெட்டி வாங்கி வந்து விடுகின்றனர். ஒரு சில வீடுகளில் மட்டுமே பலகாரங்கள் செய்கிறார்கள். இவ்வருட தீபாவளியை முறுக்கு, மிக்சர், ஜாமூன், இவற்றுடன் மட்டுமே நிறுத்தி விடாமல் சிறு தானியத்தில் சில இனிப்பு வகைகளையும் செய்து இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம். இப்பதிவில் கம்பு அதிரசம் (Kambu Adhirasam) எப்படி செய்வது என்பதனை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கம்பு மாவு – 1 கப்
வெல்லம் – 3/4 கப்
ஏலக்காய் – 2
நல்லெண்ணெய் – சிறிதளவு Butter Murukku Recipe: தீபாவளி ஸ்பெஷல் பட்டர் முறுக்கு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
செய்முறை:
ஒரு கப் சலித்த கம்பு மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு தேக்கரண்டி எள்ளும், தட்டி எடுத்த சுக்கு, ஏலம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். ஒரு கப் வெல்லத்தைக் காய்ச்சி வடித்து எடுத்துக் கொள்ளவேண்டும். பின் கலந்து வைத்த கம்பு மாவுடன் வெல்லப்பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிவராமல் கிளர வேண்டும். இதனுடன் வாசனைக்காக ஒரு தேக்கரண்டி நெய் சேர்க்க வேண்டும்.
சற்று இலகுவாகத் தான் தெரியும்.வெல்லப்பாகு சூடு குறைய குறைய மாவுக்கலவை இறுகலாக ஆரம்பிக்கும். 2 மணி நேரம் களித்து மாவை சிறிதாக உருண்டை பிடித்துக் கொண்டு எண்ணை தடவிய இலையில் வடை போல் லேசாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் சூடான எண்ணையில் போட்டு பொன்நிறமாகப் பொறித்தெடுக்க வேண்டும். கம்பு மாவுக் கலவையை 2 முதல் 3 நாள் வரை வைத்திருந்து கூட தேவைப்படும் போது சுட்டு சுவைக்கலாம்.