First Night Tips: முதலிரவு குறித்து சந்தேகமா? முழு விபரம் இதோ.!

காலங்கள் மாறினாலும், தொழிநுட்பத்தை வளர்ச்சி கையில் இருந்தாலும், முதலிரவு தொடர்பான சந்தேகங்கள் பாலின பாகுபாடின்றி தொடருகிறது. இன்று அதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

First Night Tips: முதலிரவு குறித்து சந்தேகமா? முழு விபரம் இதோ.!
Couple Bed Enjoy (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 19, சென்னை (Lifestyle News Tamil): திருமணம் முடிந்த தம்பதிகள் முதலிரவு என்ற பாரம்பரிய சடங்கு முறையில் முதலிரவு அறைக்கு அனுப்பி வைக்கப்படுவது இன்றளவும் தொடருகிறது. என்னதான் கையில் உலகம் தொழில்நுட்ப உதவியால் இருந்தாலும் முதலிரவு மற்றும் அதன் நடைமுறைகள் குறித்து பல சந்தேகங்கள் இளம் தம்பதிக்கு இருக்கின்றன. இன்று முதலிரவு (First Night Tips in Tamil) மற்றும் அது தொடர்பான சந்தேகங்களுக்கு இப்பதிவில் தீர்வை காணலாம்.

முதலிரவு:

ஒவ்வொரு திருமணமான தம்பதிகளும் அன்றைய நாளின் இரவோ அல்லது தேதி பார்த்தோ இணைய முதலிரவு உதவுகிறது. பொதுவாக இந்திய திருமணங்களில் திருமணத்துக்கு முன்பு தம்பதிகள் பேசி இருப்பது, பழகி இருப்பது என்பது பெரும்பாலும் நடப்பதில்லை. இன்றளவில் அந்நடைமுறை மாறி வருகிறது. தம்பதிகள் தங்களுக்குள் தங்களின் எண்ணங்கள் குறித்து பேசிக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தவே முதல் இரவு அமைக்கப்பட்டது. அந்த முதல் இரவில் இருவரும் மனம் திறந்து பேசலாம். காதலில் விழும் ஆண்கள்.. காரணம் என்ன? ஆய்வில் சுவாரஷ்ய தகவல்.! 

முதலிரவு சில முக்கிய ஆலோசனைகள்:

முதலிரவில் இணையும் தம்பதிகள் முதல் நாளே உடலளவில் இணைய வேண்டும் என்ற அவசியம் இல்லை. திருமண நாள் அன்று தம்பதிகள் உங்களுக்கு விருப்பம் இருப்பின் உடலளவில் இணையலாம். அதேநேரத்தில், தங்களுக்கு பிடித்த விஷயங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து இருவரும் மனம்விட்டு பேசலாம். தம்பதிகளின் வாழ்க்கைக்கான முதல் இரவு இனிமையான தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம். முதலில் அவசரப்பட்டு பயம் உண்டானால் இறுதி வரை அது தொடரும் என்பதை மறக்க வேண்டாம்.

Couple in Bed (Photo Credit: Pixabay)
Couple in Bed (Photo Credit: Pixabay)

வற்புறுத்த வேண்டாம்:

முதலிரவை பொறுத்தமட்டில் தம்பதிகள் தங்களின் உரையாடலுக்கு பின்னர் விருப்பம் இருப்பின் உடலுறவில் ஈடுபடலாம். இதில் வற்புறுத்தல் என்ற விஷயம் அறவே கூடாது. துணை தனக்கு விருப்பமாக இருக்கிறது என துணையை உடலுறவுக்கு வற்புறுத்தினால், அது பாலியல் இன்பத்தின் மீதான விரக்தியை அதிகரிக்க வழிவகை செய்துவிடும். ஆகையால், முதல் இரவில் துணை வேண்டாம் என்று கூறினால், காத்திருப்பதில் தவறில்லை. பின் இருவரும் பேசிப்பழக தொடங்கியபின் அதுவே ஓர் நாள் நடந்துவிடும். இது இயற்கையான விஷயம்.

கவனமாக இருங்கள்:

தம்பதிகள் தங்களின் உடலுறவுக்கு பின்னர் உடலை சுத்தம் செய்வது நல்லது. மாறாக வேலை முடிந்தது என தூங்கினால் தொடக்கத்தில் சில குறுகிய கால பால்வினை தொற்றுக்கு ஆட்பட நேரிடும். ஆகையால், புதுமண தம்பதிகள் உடலுறவுக்கு பின்னர் குளித்துவிட்டு மீண்டும் உறங்குவது நல்லது. எந்த ஒரு சூழ்நிலையிலும் துணையை வற்புறுத்துவது இருவரின் அன்புக்கு எமனாக அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

என்ன செய்யலாம்?

உடலுறவில் ஈடுபடும் தம்பதிகள் பேசுதல், செல்லசிணுங்கள், கொஞ்சல் எனத் தொடங்கலாம். போர்ப்பிலே எனப்படும் முறையை கடைபிடித்து, பின் உடலுறவை தொடங்கலாம். எடுத்ததும் உடலுறவு மேற்கொண்டால் பெண்ணின் அந்தரங்க பகுதியில் உயவை ஏற்படுத்தும் திரவம் சுரக்காது. இதனால் பெண்ணுக்கு வலி ஏற்படும். இதுவும் பெண் உடலுறவை வெறுக்க காரணமாக அமையலாம். ஆதலால் பொறுமை, நிதானத்தை கடைபிடியுங்கள். இருவரும் பரஸ்பரம் தங்களுக்கு தேவையான விருப்பத்தை கேட்டு நிறைவேற்றுங்கள். பிடிக்காததை ஒருபோதும் செய்ய கட்டாயப்படுத்த வேண்டாம். அதேநேரத்தில், இயற்கைக்கு மாறான வகையில் கண்ட வீடியோக்களை பார்த்து முயற்சிக்க வேண்டாம். இது கட்டாயம் துணையின் மணமுறிவுக்கு வழிவகை செய்யும்.

(The above story first appeared on LatestLY on Apr 19, 2025 07:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).