Butter Murukku (Photo Credit: YouTube)

அக்டோபர் 24, சென்னை (Kitchen Tips): தீபாவளி (Diwali) என்றாலே விதவிதமான மணக்கும் சுவையான பலகாரங்கள்தான். அந்தவகையில், பட்டர் முறுக்கு தீபாவளி பண்டிகைக்கு ஒரு ஸ்பெஷல் ஆகும். பட்டர் முறுக்கு செய்வது சரியான அளவில் பொருட்களை சேர்த்து, சரியான முறையில் பிசைந்து, சரியான வெப்பத்தில் பொரித்தால்தான், நாம் எதிர்பார்க்கும் மொறுமொறுப்பான பட்டர் முறுக்கு கிடைக்கும். இப்பதிவில் பட்டர் முறுக்கு (Butter Murukku) எப்படி செய்வது என்பதனை பார்ப்போம். Palakottai Thuvaiyal Recipe: ருசியான பலாக்கொட்டை துவையல் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்

கடலை மாவு - அரை கப்

பொட்டுக்கடலை மாவு - கால் கப்

வெண்ணெய் - அரை கப்

சீரகம் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு. Diwali 2024: தீபாவளி 2024 எப்போது? நல்ல நேரம் மற்றும் அதன் சிறப்புகள் குறித்த முழு விவரம் இதோ..!

செய்முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்தக் கலவையில் வெண்ணெய் சேர்த்து, நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவை சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, கொஞ்சம் கெட்டியாக பிசையவும். அதிகமாக தண்ணீர் விட்டால் முறுக்கு பிழியும் போது உதிரி உதிரியாகிவிடும். மிகவும் கெட்டியாக பிசைந்தால் முறுக்கு உடைந்துவிடும்.
  • பிசைந்து வைத்த மாவை சுமார் 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதனால் மாவு நன்றாக பிணைந்து கொள்ளும். முறுக்கு அச்சை எண்ணெயில் நனைத்து, பிசைந்த மாவை எடுத்து அச்சில் வைத்து, சூடான எண்ணெயில் பிழிந்து விடவும். அவ்வளவுதான் சுவையான பட்டர் முறுக்கு ரெடி.