Mango Halwa Recipe: தித்திக்கும்... மாம்பழ அல்வா.. குட்டீஸுக்கு பிடித்தவாறு செய்வது எப்படி?.!
உங்கள் குழந்தைகளை குதுகலமாக்க சுவையான மாம்பழ அல்வா செய்து கொடுத்து அசத்துங்கள்!
மார்ச் 25, சென்னை (Chennai): மாம்பழ சுவையானது என்பதால், இதை எப்படி தயாரித்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக மாம்பழத்தைக் கொண்டு அல்வா தயாரித்தால், அதன் சுவை இன்றும் அலாதியாக இருக்கும். மாம்பழ அல்வா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மாம்பழம் - 3
ரவை - 4 ஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1/2 கப்
ஏலத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் புட் கலர் - சிறிது
முந்திரி, உலர் திராட்சை - தேவையான அளவு Velliangiri Hill Accident: வெள்ளியங்கிரி மலையில் தொடரும் சோகம்.. கடந்த 2 நாட்களில் 3 பேர் உயிரிழப்பு..!
செய்முறை: மாம்பழத்தை தோல் சீவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். மறுபக்கம் வானலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் ரவையை சேர்த்து வறுக்கவும் (ரவை பைண்டிங்காக மட்டுமே நிறைய போட்டா கேசரி ருசியில் வந்து விடும் அல்வா மாதிரி இருக்காது அதனால் மிகவும் குறைந்த அளவு சேர்க்கவும்) ரவை வறுபட்டதும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும் வெந்ததும் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து நன்கு கிளறவும் பின் சற்று திக்கானதும் சர்க்கரை சேர்த்து கிளறவும்