மார்ச் 25, கோவை (Covai News): கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை (Velliangiri Hill) தரிசனத்திற்கு பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பங்குனி உத்திரத்தை ஒட்டி நேற்று (மார்ச் 24) கிரிமலை யாத்திரை சென்ற சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் (35) முதல் மலையிலும், ஹைதராபாத் சென்ட்ரல் பகுதியை சுப்பா ராவ் (57) 4ஆவது மலையிலும் யங்கி விழுந்து உயிரிழந்திருந்தனர். Viral Video: "சேதுபதி ஐபிஎஸ்" செந்தில் வேலையைச் செய்த உபி மக்கள்.. தண்டவாளத்தின் நடுவே ரயிலைத் தள்ளி அட்டூழியம்..!
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன்(46) இரண்டாவது மலை அருகே வழுக்குப்பாறை பகுதியில் உடல் நலம் பாதிக்கபட்டு உள்ளதாக கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் அங்கு சென்ற போது பாண்டியன் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெள்ளியங்கிரி மலைக்கு, உடல் நல பிரச்னைகள் இருப்பவர்கள் மருத்துவ முன்னேற்பாடுகள் மற்றும் மருத்துவ அறிவுரை இன்றி ஏறவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.