Ragi Puttu Recipe: 2 நிமிடத்தில் ராகி புட்டு.. இப்படி செஞ்சு பாருங்க, கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..!

ராகி புட்டு எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Ragi Puttu (Photo Credit: YouTube)

மார்ச் 14, சென்னை (Kitchen Tips): இப்போது நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடும் வகையில் ஆரோக்கியம் நிறைந்த ராகி புட்டு (Ragi Puttu) எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். ராகியில் இருப்பு சத்து அதிகம் உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தேவையான பொருட்கள்:

ராகி புட்டு மாவு - 3 கப்

உப்பு - 2 பின்ச்

தேங்காய் துருவல் - 2 கப்

அரிசி புட்டுமாவு - 1 கப் Samsung Galaxy Ring: "ஸ்மார்ட் வாட்ச்-க்கு விடுதலை" - புதிய பரிணாமத்துடன் களமிறங்கும் சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் ரிங்.. அசத்தல் விபரம் இதோ.!

செய்முறை: முதலில் ராகி மாவு, புட்டு அரிசி மாவு சேர்த்து உப்பு போட்டு, பின் தண்ணீர் தெளித்து உதிரியாக பிசைந்துவிடவும். அமுக்கி பிடித்தால் பிடிக்கவரும். பின் விட்டால் உதிரியாகி விடும். அதான் புட்டு பதம். பின்னர் தேங்காய் துருவல் ரெடி பண்ணிக் கொள்ளவும். மாவை புட்டு குழலில் அச்சைப் போட்டு முதலில் மாவு, அடுத்துதேங்காய் துருவல் பின்மாவு அடுத்து தேங்காய் துருவல் சேர்த்து மூடிவிடவும்.பின் குக்கரில் தண்ணீர் ஊற்றி மூடியை மூடவும். வெயிட் போட வேண்டாம். அதில் தான் புட்டுக்குழலை மாட்டவேண்டும்.

பார்த்து சரியாக மாட்டனும். அசைத்துப் பார்த்தால் குழல் அசையாது. 2 நிமிடத்தில் மேலே ஆவி வந்து விடும். புட்டும் சரியாக வெந்து இருக்கும். அவ்வளவு தான் ராகி புட்டு ரெடி. இதனை பழம், கட்டன் சாயா, கடலைக்கறி, நாட்டுச் சர்க்கரை வைத்துச் சாப்பிடலாம்.