Diwali 2024: தீபாவளி தேதி குழப்பம்.. 2024 தீபாவளி எப்போது..? முழு விவரம் உள்ளே..!
2024 தீபாவளி அக்டோபர் 31 அல்லது நவம்பர் 01 அன்று கொண்டாடப்படுமா என்பது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அக்டோபர் 23, சென்னை (Festival News): தீபாவளி (Diwali) உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்த 2024-ஆம் ஆண்டு, தீபாவளி அக்டோபர் 31 அல்லது நவம்பர் 01 அன்று கொண்டாடப்படுமா என்று மக்கள் குழப்பத்தில் இருப்பதால், அதற்கான பதிலை இப்பதிவில் பார்ப்போம். Diwali 2024: பட்ஜெட் பத்மநாபன்கனே! தீபாவளி பர்சசிங் பிளான் சந்தேகமா? அசத்தல் டிப்ஸ் இதோ.!
பொதுவாக தீபாவளி கார்த்திகை மாதம் வரும் அமாவாசையில் கொண்டாடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அமாவாசை (New Moon) வரும் அக்டோபர் 31-ஆம் தேதி மதியம் 3.52 மணிக்கு தான் தொடங்குகிறது. மேலும், இதற்கு அடுத்த நாள் நவம்பர் 01-ஆம் தேதி மாலை 6.16 மணி வரை இருக்கிறது. இதன் காரணமாக, இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31-ஆம் தேதியா அல்லது நவம்பர் 01-ஆம் தேதியா என்ற குழப்பம் நிலவியது. எந்த நாளின் இரவில் அமாவாசை இருக்கிறதோ, அன்றைய நாளே தீபாவளி (Diwali Festival) நாளாகும். எனவே, வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும். Diwali 2024: தீபாவளி 2024 எப்போது? நல்ல நேரம் மற்றும் அதன் சிறப்புகள் குறித்த முழு விவரம் இதோ..!