அக்டோபர் 22, சென்னை (Budget Tips): தீபாவளி செலவுகளைப் பற்றி நினைத்தால் கிருஷ்ண பகவான் நரகாசுரனை மன்னித்தே விட்டிருக்கலாம் என தோன்றுகிறது அல்லவா? உண்மைதான் தீபாவளி என்னவோ ஒரு நாள் தான் ஆனால் அதன் தாக்கமும் செலவும் 4 முதல் 5 மாதங்கள் வரை நீடிக்கிறது. அதிலும் தற்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் மூளைச் சலவை செய்து பொருட்களை வாங்க வைக்கும் விளம்பரங்கள் மட்டுமே. நாம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டு அடுத்து அடுத்து வரும் செலவுகளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கிறோம். இந்த தீபாவளியில் செலவுகளை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று முடிவெடுக்கும் நேரம் இது.
தீபாவளி சலுகைகள்: தீபாவளி என்றாலே புதுத்துணி வாங்குவது அனைத்து வீடுகளிலும் காலம் காலமாகப் பின்பற்றி வரும் வழக்கமாகும். அதிக தள்ளுபடி, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், கிரிடிட் கார்டு ஆஃபர் என பல கண் கவர் சலுகைகளைக் கொடுத்து மக்களைத் தன் பக்கம் இழுப்பதில் அனைத்து கடைகளும் மும்மரம் காட்டி வருகின்றனர். இவைகளுடன் போட்டி போட இணையதள வணிகங்களும் களத்தில், பிக் தீபாவளி சேல்,கிரேட் இந்தியன் சேல் என பெயர் வைத்து மக்களை அதிக அளவில் பொருட்கள் வாங்க வைக்கின்றனர். ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதில் பிரச்சனை இல்லை ஆனால் தன்னை மறந்து தேவைக்கு அதிகமாக வாங்குவதில் தான் பிரச்சனை எழுகிறது. Green Chilly Curry: பச்சை மிளகாய் மட்டும்தான் சமைக்க இருக்குதா? மிளகாயில் காரசாரமான, சுவையான தொடுகறி.. அசத்தல் சமையல் டிப்ஸ் இதோ.!
துணி வாங்கும் முன்: புதுத்துணி வாங்கப் போகும் முன் தன்னிடம் என்ன வகைத்துணி அத்தியாவசியமாக தேவைப்படுகிறது, எத்தனை துணி எடுக்கலாம் என்று தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் பலர் அங்கு போய் பார்த்து துணி எடுக்கலாம் என்று நினைத்து செல்வார்கள் ஆனால் அங்கோ பல சலுகையில் மனதைப் பறிப்கொடுத்துவிட்டு பட்ஜெட்டைவிட அதிகமான துணியை எடுத்துவிட்டு அடுத்த செலவுக்கு கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதை சமாளிக்கவே திட்டமிட்டு செல்வது அவசியமாகிறது.
மின் சாதனங்கள்: தீபாவளி சலுகையில் பலர் வீட்டுஉபயோகப் பொருட்கள் வாங்குவார்கள். ஆடம்பரத்துக்காகக் வாங்காமல் அத்தியாவசிய தேவை அறிந்து வாங்க வேண்டும். சிலர் வாகனமும் வாங்க திட்டமிட்டு இருப்பார்கள். தேவையான பொருட்களை இ.எம்.ஐ யில் வாங்கலாம். ஒருவேளை ஏற்கனவே இ.எம்.ஐ யில் ஒரு பொருளுக்கு பணம் செலுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இன்னொரு பொருள் வாங்காமல் இருப்பதே சிறந்தது.
சிலர் புதிய போன், ஸ்மார்ட் வாட்ச் போன்ற மின்சாதனங்கள் வாங்க வேண்டும் என நினைப்பார்கள். போன் நிறுவனங்களும் ஒரு ஒரு பண்டிகைக்கும் சீரிஸாக புது புது போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தங்களிடம் பண்டிகையை சமாளிக்கும், தேவைக்கு பணம் இருக்கிறது என்றால் மின் சாதனங்கள் வாங்கலாம். அதை விடுத்து கடன் வாங்கி இவை எதையும் வாங்க வேண்டாம். இ.எம்.ஐ -யில் வாங்குகிறீர்கள் எனில் குறித்த நாளில் தவணையை செலுத்தி விடுங்கள். இல்லையேல் அதற்கு அபராதம் விதித்து கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும். பிறகு சலுகையில் வாங்கியதற்கு எந்த பயனும் இல்லாமல் ஆகிவிடும்.
கார் வாங்கும் முன்: கார் வாங்க விரும்புவோர் அதை நிறுத்த இடம் இருக்கிறதா என சிந்தித்து வாங்க வேண்டும். அத்துடன் பல பேர் ஆடம்பர ஆசைக்காக கார் வாங்கிக் கொள்கிறார்கள். நம்மில் பலருக்கு கார் வாங்கியதை விட அதைப் பராமரிக்கும் செலவு அதிகம் எனத் தெரியாது. ஒவ்வொரு காருக்கும் அதன் விலை விட பராமரிக்கும் விலை அதிகம் என்பதை நினைவில் வைத்து கார் வாங்கும் முடிவை எடுங்கள். Nattu Kozhi Muttai Kuzhambu Recipe: சத்தான நாட்டுக்கோழி முட்டை குழம்பு செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
ஒரு சில வீடுகளில், பண்டிகைகளில் தங்கம் வாங்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். தங்களிடம் பண சேமிப்பு இருந்தால் தாராலமாக வாங்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம், வீட்டு லோன், அல்லது அவசர தேவைகள் அடுத்தடுத்து இருப்பின் இது போன்ற பொருட்கள் அவசியமா என ஒரு முறைக்கு இரு முறை ஆலோசிக்க வேண்டும்.
எந்த பொருள் வாங்கினாலும் ஆன்லைன் ஆஃப்லைனில் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பிரபல பிராண்டுகளின் பொருட்கள் எல்லாம் ஆன்லைனில் கிட்டத்தட்ட தரமாகத்தான் தரப்படுகின்றன. பிராண்ட் அல்லாத பொருட்கள் சற்று தரம் குறைந்தே காணப்படுகிறது. ஆனால் நேரில் கடைகளில் வாங்கும் போது பேரம் பேசி குறைத்து வாங்கலாம்.
எதுவாக இருந்தாலும் பண்டிகைக்கான பணத்தை முன்கூட்டியே சேமித்து வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சேமிப்பும் திட்டமிடுதலும் இருந்தால் பண்டிகை மட்டுமின்றி வாழ்க்கையும் கொண்டாட்டமே..!