Yellow Fever Alert: வெளிநாடுகள் செல்லும் இந்தியர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்; மத்திய சுகாதாரத்துறை உத்தரவு.!
வெளிநாடுகளில் பரவி வரும் மஞ்சள் காய்ச்சல் நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, இங்கேயே தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு பயணத்தை தொடர மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மே 14, புதுடெல்லி (New Delhi): ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்களால் பரவும் மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever Symptoms & Vaccine), தற்போது ஆப்ரிக்கா மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் அதிகம் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தேவையான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த நாடுகளுக்கு இந்தியர்களும் சுற்றுலா மற்றும் வேலை விஷயமாக சென்று வருவது இயல்பு என்பதால், மத்திய அரசு வெளிநாடு செல்லும் நபர்கள் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசியால் செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தி இருக்கிறது. இதனால் வைரஸ் பரவுதலையும் தடுக்க இயலும். Husband Caught Wife Affair: மனைவியுடன் கள்ளக்காதல் உறவு; நண்பனை பீர் பாட்டிலால் குத்திக்கொன்ற நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!
மரணத்தை ஏற்படுத்தலாம்: கொசுக்களால் பரவும் மஞ்சள் காய்ச்சல் வைரஸ் நமது உடலில் பரவினால் முதலில் அறிகுறியாக காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். சிலநேரம் இரத்தப்போக்கு ஏற்படும். இதனுடன் கல்லீரல், இதயம், சிறுநீரக பாதிப்புகம் உண்டாக்கும். இதனை முன்னதாகவே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் பிரச்சனை இல்லை. நோயின் தீவிரம் அதிகமாகும் பட்சத்தில் மரணத்திற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதற்காக தடுப்பூசியும் பயன்பாட்டில் இருக்கிறது. Mumbai BillBoard Collapse: 100 அடி பேனர் சரிந்து விழுந்து சோகம்; 14 பேர் பலி., 74 பேர் படுகாயம்.. திடீர் சூறைக்காற்று, மழையால் சோகம்.!
அறிகுறிகள் மற்றும் தீவிர நிலை: நோயின் தொடக்கக்கட்டத்தில் காய்ச்சல், தலைவலி, முதுகு மற்றும் முழங்காலில் தசை வலி, குமட்டல், வாந்தி, பசியிழப்பு, தலைசுற்றல், கண்கள் சிவத்தல், முகம் மற்றும் நாக்கு சிவத்தல் போன்றவை அறிகுறியாக இருக்கும். இவற்றில் மஞ்சள் நிறத்துடன் கண்களின் நிறம் மாறுதல், மஞ்சள் நிற வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, மூக்கில் இரத்தக்கசிவு, கண்களில் இரத்தம் வருதல் போன்றவை ஆபத்தான கட்டமாக கணிக்கப்பட்டு இதய செயலிழப்பு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு, மூளை செயலிழப்பு ஆகியவற்றுக்கு வழிவகை செய்து மரணமும் உண்டாகும்.
முதற்கட்ட அறிகுறிகளின்போதே சுதாரிப்புடன் செயல்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. மேற்கூறிய அறிகுறிகள் 2 நாட்கள் தொடர்ந்தால் மருத்துவமனையில் அனுமதியாகி சோதனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.