மே 14, திருப்பத்தூர் (Tirupattur News): திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குரிசிலாப்பட்டு, குண்டு ரெட்டியூர் கிராமத்தில் வசித்து வருபவர் காளிதாஸ் (32). இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். தற்போது வேலை காரணமாக ஓசூரில் தங்கியிருத்தவாறு வேலை செய்து வருகிறார். அவ்வப்போது தனது வீட்டிற்கு வந்து செல்வார். இதே பகுதியை சேர்ந்த ஓட்டுநர் சரவணன் (35). இருவரும் இணைபிரியாத நண்பர்கள் ஆவார்கள். மதுபோதையில் (Affair Wife Caught by Husband) ஊரைச்சுற்றுவது, வெளியூர் சென்றால் ஒன்றாக பயணிப்பது என உயிருக்கு உயிராக இருந்து வந்துள்ளனர். காளிதாசுக்கு திருமணமாகி ரேவதி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில், ரேவதி - சரவணன் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த தகவல் காளிதாசுக்கு தெரியவரவே, அவர் தனது மனைவி மற்றும் நண்பனை கண்டித்து இருக்கிறார். பலமுறை கண்டித்து வந்ததால், நண்பர்கள் இருவரும் பிரிந்து இருக்கின்றனர். எனினும், அவ்வப்போது கணவர் ஊரில் இல்லாத சமயத்தில் ரேவதி - சரவணன் கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்து வந்துள்ளது. Mumbai BillBoard Collapse: 100 அடி பேனர் சரிந்து விழுந்து சோகம்; 14 பேர் பலி., 74 பேர் படுகாயம்.. திடீர் சூறைக்காற்று, மழையால் சோகம்.!
இன்ப அதிர்ச்சியாக வந்த கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி: இந்நிலையில், சம்பவத்தன்று கள்ளக்காதல் ஜோடி ரேவதியின் வீட்டில் உல்லாசமாக இருந்துளளது. அச்சமயம் காளிதாஸ் ஓசூரில் இருந்து திடீரென வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன கள்ளக்காதல் ஜோடி செய்வதறியாது திணறிய நிலையில், சரவணன் பீரோவின் பின்பக்கம் மறைந்து இருந்துள்ளார். வீட்டிற்கு வந்த காளிதாஸ், தனது மனைவியின் செயல்பாடுகளில் உள்ள பதற்றத்தை கவனித்து இருக்கிறார். இதனையடுத்து, சந்தேகமடைந்தவர் வீட்டினை சுற்றி பார்த்தபோது, சரவணன் பீரோவின் பின்புறத்தில் இருந்து வந்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த காளிதாஸ், தனது கையில் கிடைத்த கரண்டி, கட்டையை கொண்டு நண்பனை தாக்கி இருக்கிறார். ஒருகட்டத்தில் பீர் பாட்டிலால் தாக்குதல் நடத்தப்பட்டதில் சரவணன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், காளிதாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.