Covishield Side Effects: கோவிஷீல்டு தடுப்பூசியால் என்னென்ன பக்கவிளைவுகள் வரும்.? வெளியான அதிர்ச்சி தகவல்..!
கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மே 01, புதுடெல்லி (New Delhi): 2019 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய சம்பவம் தான் கொரோனா. கொரோனாவால் இந்தியாவில் மட்டும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். தமிழ்நாட்டில் 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 38,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை குணப்படுத்த பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அது இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகள் போடப்பட்டது.
கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவுகள்: முன்னர் இந்த கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும் சிலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் பரவின. அதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய சுகாதாரத்துறை ஆனது விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. அதாவது இந்த தடுப்பூசியின் பக்க விளைவாக பக்கவாதம், மூளை பாதிப்பு, மாரடைப்பு, நுரையீரலில் ரத்தம் உறைதல் உள்ளிட்டவை ஏற்படுவதாக கூறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அஸ்ட்ராசெனகா (AstraZeneca) நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையானது தற்போது வெளியாகி உள்ளது. Australia Squad For 2024 T20 World Cup: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்.. ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார்?.!
அதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியால் மிகவும் அரிதான பக்க விளைவாக ரத்த உரைகள் ஏற்படலாம். இதற்குக் காரணம் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.