![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1714542656aus%2520squad-380x214.png)
மே 01, சென்னை (Sports News): டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (ICC Men's T20 World Cup 2024) வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான விளம்பர தூதராக பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசைன் போல்ட், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படுபவர். இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. International Labour Day 2024: "உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லேயா அர ஹோயா.." சர்வதேச தொழிலாளர் தினம்..!
டி20 உலகக் கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி: இந்நிலையில் தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்க்கான ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இப்பட்டியலில் மிட்ச் மார்ஸ் (Mitch Marsh) (கேப்டன்), அஸ்டன் அகார், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லீஸ், கேமரூன் கிரீன், ஜோஸ் ஹேஷல்வுட், ட்ராவிஸ் ஹெட், ஜோஸ் இங்லீஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேதிவ் வாடே, டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.