Paracetamol Tablets (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 02, சென்னை (Health News Tamil): பாராசிட்டமல் மாத்திரை பெரும்பாலான வீட்டில் காய்ச்சல், உடல்வலி, சோர்வு உட்பட பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசியமான மாத்திரைகளில் ஒன்றாகிவிட்டது. மருத்துவரின் எந்தவிதமான பரிந்துரையும் இன்றி எடுத்துக் கொள்ளப்படும் பாராசிட்டமால் மாத்திரை காரணமாக மிகப்பெரிய பாதிப்பு உண்டாகியுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்து நாட்டில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பாராசிட்டமல் மாத்திரை குறித்து ஆய்வு நடத்தி வந்தனர். Health Warning: இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுறீங்களா? இன்ஸ்டன்ட் மரணத்துக்கு வாய்ப்பு.. மருத்துவர்கள் எச்சரிக்கை.! 

பாராசிட்டமால் மாத்திரை ஆபத்து (Paracetamol Tables Side Effects):

இந்த ஆய்வில் பாராசிட்டமால் மாத்திரையை ஆபத்தானதாக வகைப்படுத்தி இருக்கின்றனர். மேலும், 65 வயதுக்கு மேல் இருப்பவர்கள் அடிக்கடி பாராசிட்டமல் மாத்திரை எடுத்துக் கொண்டால், கடுமையான இதய நோய், வயிறு சார்ந்த பிரச்சனைகள், மூட்டு நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படலாம் எனவும் கூறுகின்றனர். இவ்வகை இணை நோய்கள் காரணமாக மரணம் தொடர்பான அபாயமும் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். காய்ச்சல், தலைவலிக்கு உடனடி நிவாரணியாக பாராசிட்டமால் மாத்திரை பயன்படுத்தப்படும் நிலையில், குழந்தைகளுக்கும் அதனை கொடுப்பது மிகப்பெரிய ஆபத்தை வழிவகை செய்யும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

வயதானவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை:

சிறு சிறு உடல் வலி, காய்ச்சல் போன்றவற்றுக்கு பாராசிட்டமால் மாத்திரையை நம்ப கூடாது என்றும், இயல்பாகவே அவை சரியாகிவிடும் என்றும், அவசியம் இருப்பின் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சாப்பிட வேண்டும் என்றும் வல்லுநர்கள் ஆலோசனை கூறுகின்றனர். மேலும், பாராசிட்டமால் மாத்திரையால் மூளையில் வேதிப்பொருள் தாக்கம் ஏற்படும். இதனால் எந்த விஷயத்துக்காகவும் சிறிய அளவிலான பிரச்சனைக்கு உடனடியாக பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதிகளவில் நீண்ட காலம் தொடர்ந்து பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு செரிமான பிரச்சனைகள், இதய நோய், சிறுநீரக பாதிப்பு, பக்கவாதம், இதய செயலிழப்பு போன்றவற்றிற்கும் காரணமாக அமைய மற்றும் கூறுகின்றனர். மருத்துவரின் அனுமதி இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் இவ்வகை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில், அதன் தாக்கம் கட்டாயம் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறுகின்றனர்.