Batteries: மறந்தும் குழந்தைகளிடம் பேட்டரி, காந்தத்தை விளையாட கொடுக்காதீங்க; மரணமும் ஏற்படலாம் - மருத்துவர் எச்சரிக்கை.!

குழந்தைகள் கையில் விளையாட அல்லது அலட்சியமாக பேட்டரி, காந்தம் போன்றவை கிடைக்கும் வகையில் செயல்படுவது, அவர்களின் மரணத்தை நாமே ஊக்குவிக்கும் அபாயகட்ட செயலாகவும் கூட மாறும் என்பதை கவனத்தில் வைத்து பெற்றோர் செயல்பட வேண்டும்.

Batteries (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 12, எழும்பூர் (Chennai News): வீட்டில் புதிதாக பிறந்த குழந்தைகள் முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை, விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடுவது இயல்பானது எனினும், இன்றளவில் பெரும்பாலான விளையாட்டுப்பொருட்கள் பேட்டரி சார்ந்த பொம்மைகளாக மாறிப்போயுள்ளன. இவ்வாறான பேட்டரி பொம்மைகளில் ஒருசில பொருட்களில் பெரிய அளவிலான 2ஏ பேட்டரி, சிறிய அளவிலான பேட்டரி என மாறுபட்ட வகைகள் இருக்கின்றன. இவற்றில் பெரிய அளவிலான பேட்டரி தயாரிப்பு முறையின்போதே, அது வெளிப்படாத வண்ணம் அல்லது எளிதில் பிரிக்கப்படாத வண்ணம் இருக்கும். ஆனால், சிறிய அளவிலான பேட்டரி என்பது, குழந்தைகள் விஷயத்தில் பாதுகாப்பு பிரச்சனையை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கின்றன. இவ்வகை பேட்டரிகளை குழந்தைகள் பார்த்து ஆர்வப்பட்டு, சிலநேரம் அவை விழுங்கவும் கூடும். பேட்டரிகளில் சிறியது, பெரியது என எதை விழுங்கினாலும் உடலுக்கு கேடு எனினும், சிறிய அளவிலான பேட்டரி அதன் மிளிரும் தன்மையால் குழந்தைகளால் விரும்பப்படுகிறது. Palakottai Thuvaiyal Recipe: பலாக்கொட்டை துவையல் சுவையாக செய்வது எப்படி..? விவரம் உள்ளே..! 

மருத்துவர் எச்சரிக்கை:

ஆட்சியத்துடன் அதனை கையாளும் பெற்றோர், கீழே விழுந்த பேட்டரிகளை எடுத்து வைக்கவில்லை என்றால், அதனை குழந்தைகள் உட்கொள்ளக்கூடும். சில குழந்தைகள் கையில் வைத்து அதனை விளையாடுவதுபோல தோன்றினாலும், நொடியில் அதனை உட்கொண்டு நமக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். இவ்வாறு விழுங்கப்படும் பேட்டரிகள், மலக்குடல் வழியாக வெளியேறிவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், வெளியேறாமல் உள்ளேயே சிக்கொண்டால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக சென்னை எழும்பூர் குழந்தைகள் னால மருத்துவமனை மருத்துவர் வேல்முருகன் எச்சரிக்கிறார். இந்த விஷயம் குறித்து மருத்துவர் கூறுகையில், "பட்டன் வடிவிலான பேட்டரிகளை விழுங்கியதாக, நமது மருத்துவமனையில் 51 குழந்தைகளின் உடலில் இருந்து பேட்டரிகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறியரக பட்டன் பேட்டரிகள் விவகாரத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். இந்த பேட்டரிகள் இரத்த நாளத்தை பாதிக்கும், உணவுகுடலை பாதிக்கும், உணவுக்கூடல் செதிலை பாதித்துவிடும். உணவுகுடலில் அரிப்பு ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்பு நேரிடும். Cuddalore: "எப்ப பார்த்தாலும் படி-படி".. பெற்றோரின் கண்டிப்பால், பள்ளி மாணவிகள் திடீர் மாயம்.. பதறிய பெற்றோர்.! 

உணவுகுழாய்யை அரித்து மரணம் ஏற்படலாம்:

அதனை குணப்படுத்துவது கஷ்டம், குழந்தைகளை காப்பாற்றுவதும் கடினம், பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆறு மாதத்தில் இருந்து 10 வயது வயது குழந்தைகள் வரை இதனால் பாதிக்கப்படுகின்றனர். பேட்டரி விளையாட்டு உபகரண்ங்கள், சிறிய ரக பேட்டரி மிகவும் பயங்கரமானது. இதில் பயங்கரமான கரண்ட் சார்ஜ் உள்ளது; சாதாரண பேட்டரிக்குள் 1.5 வோல்ட் மின்சார திறன் சக்தி இருக்கும். சிறிய பேட்டரியில் 3 வோல்ட் கரண்ட் இருக்கும். இது மிகவும் ஆபத்தானது. குழந்தை பொதுவாகவே புதிய பொருளை பார்த்து விழுங்க நினைக்கும். விழுங்கினால் கரண்ட் சார்ஜ் உணவுக்குழாய்யை அரிக்கும். பேட்டரியில் இருக்கும் கரண்ட் உணவுக்குழாயை பாதிக்கும். அதனை சரி செய்வது கடினம், ரத்தக்குழாயும் பாதிக்கும். சரியாக சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் அல்லது பேட்டரி அகற்றப்படாத பட்சத்தில் மரணமும் ஏற்படலாம். அதனை தவிர்க்க பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். உபயோகம் இல்லாத பேட்டரிகளையும், புதிய பேட்டரிகளையும் பெற்றோர் கவனமாக குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில வைக்க வேண்டும்.

காந்தத்திலும் கவனம் வேண்டும்:

பேட்டரியை தயாரிப்போர் குழந்தைகள் அதனை கழற்ற இயலாத வகையில் உருவாக்க வேண்டும். குழந்தைகளால் விழுங்கப்பட்டு பேட்டரி உணவுக்குழாயில் சேர்ந்து, குடல் வழியே வெளியே வந்துவிட்டால் பிரச்சனை இல்லை. நெஞ்சில் சிக்கிக்கொண்டால் பேராபத்து தான். அதனை நாங்கள் உடனடியாக அகற்றிவிடுவோம். அதேபோல, காந்தம் இரண்டு, மூன்று விழுங்கினால், சிறுகுடலுக்கு சென்றதும், இரண்டு காந்தம் ஒட்டிக்கொள்ளும். இதனால் குடலில் ஓட்டை விழும் வாய்ப்பு அதிகம். எங்களிடம் இவ்வாறான பிரச்சனை வந்தால், உடனடியாக பெரும்பாலும் நாங்கள் அதனை லெப்ரோசக்கோபி சிகிச்சை முறையில் வெளியே எடுத்துவிடுவோம். பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் குறைந்தபட்ச கோரிக்கை" என கூறினார்.