How to Make Shikakai Shampoo at Home: இயற்கை முறையில் சீயக்காய் ஷாம்பு.. வீட்டிலேயே செய்வது எப்படி?.!

இயற்கையான முறையில் வீட்டிலேயே சீயக்காய் ஷாம்பு தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

Hair Growth (Photo Credit: @heavenlymariam X)

டிசம்பர் 29, சென்னை (Chennai): அதிக கெமிக்கல் மிக்க ஷாம்புக்களால் கூந்தலை இழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தலைமுடிக்கேற்ற சரியான ஷாம்புவை தேர்வு செய்யாதது, அதிக கெமிக்கல் மிகுந்த ஷாம்புக்களை வாங்குவது, விலை குறைந்த தரமற்ற ஷாம்புக்களை பயன்படுத்துவது, முடி உதிர்வு, முடி அடர்த்தி குறைவு பிரச்சனை சந்திக்கும் போதெல்லாம் ஷாம்புக்களை மாற்றுவது, நறுணத்துக்காக ஷாம்புக்களை வாங்குவது என ஏதாவது ஒரு பிரச்சனையால் பாதிக்கப்படுவது கூந்தல் தான். இதற்கெல்லாம் தீர்வு இயற்கையிலேயே உள்ளது. இயற்கையான முறையில் வீட்டிலேயே சீயக்காய் ஷாம்பு (Shikakai Shampoo) தயாரித்து பயன்படுத்துவதன் மூலம், முடியை நாம் பராமரிக்கலாம். Indian Ocean Earthquake: இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையா?.!

தேவையான பொருள்கள்

சிகைக்காய் - 10 முதல் 15 சிகைக்காய் அல்லது தூளாக்கப்பட்ட சிகைக்காய் 1 கப்

பூந்திக்கொட்டை - 100 கிராம் அளவு

நெல்லி முள்ளி - அரை கப்

வெந்தயம் - அரை கப்

சீயக்காய் ஷாம்பு செய்யும் முறை: முதலில் ஒரு நாள் முன்பே பூந்திக் கொட்டையை ஊறவைத்து விட வேண்டும். இதனுடன், வெந்தயம், சிகைக்காய், நெல்லி முள்ளி போன்ற மூன்றையும் ஊற வைக்க வேண்டும். இது பவுடராக இருந்தால் ஊற வைக்கத் தேவையில்லை. மறுநாள் பூந்திக்கொட்டை ஊற வைத்த பாத்திரத்திலிருந்து அகன்ற பாத்திரத்தில் மாற்றி அனைத்தையும் ஒன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் இவற்றை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கனமான கரண்டியைக் கொண்டு அதனை நன்றாக அழுத்தி அழுத்தி வேக விட வேண்டும். இவ்வாறு கலக்கும் போது நுரை வரும். இதனைத் தொடர்ந்து செய்யும் போது சிகைக்காய், வெந்தயம், நெல்லி முள்ளி போன்றவை மசிய ஆரம்பிக்கும். Ayodhya Airport: அயோத்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வால்மீகி பெயர்; பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.. விபரம் இதோ.!

அடுப்பிலேயே வைத்து நன்றாக அழுத்தி மசித்து விட வேண்டும். இதில், நீர் நான்கில் ஒரு பாகமாக சுண்டும் வரை காய்ச்சி இறக்கலாம். இதனை மூன்று மணி நேரம் கழித்து பார்க்கும் போது கலவை அடியில் தங்கிவிடும். இதனை வடிகட்டில் பாட்டிலில் ஊற்றி விட்டால் சீயக்காய் ஷாம்பு தயாராகி விடும். அடி தங்கிய கலவை கையால் மசித்து பிழிந்து வெளியேற்றலாம். இவ்வாறு பாட்டிலில் சேர்த்து வைத்த சீயக்காய் ஷாம்புவை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தயாரித்து பயன்படுத்தலாம். இதனை வெளியில் வைக்காமல் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து பயன்படுத்த வேண்டும்.