செப்டம்பர் 13, சென்னை (Health Tips): தினமும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற அவர்கள் நன்றாக படிக்க வேண்டும். அதற்கு மூளை வளர்ச்சி என்பது முக்கியம். மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும் உணவுகள் மாணவர்களின் சிந்தனை திறன், கற்றல் திறனை மேம்படுத்தும். அந்த வகையில் மூளைக்கு நன்மை தரும் உணவுகளை நாம் அவ்வப்போது குழந்தைகளின் உணவில் சேர்ப்பது நல்லது. மூளையை ஆரோக்கியமாக வைக்கவும், நினைவாற்றலை அதிகரிக்கவும், ஞாபக சக்தியை ஊக்குவிக்கவும் உணவு உறுதி செய்கிறது.
மீன்கள் சாப்பிடலாம்:
மூளையில் இருக்கும் நரம்புகள் வயது முதிர்ச்சி, சத்து குறைவு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் சோர்வடையும். இதனால் ஞாபக மறதி ஏற்படும். ஒரு சில நேரம் மாணவர்கள் அவர்களுக்கு அளிக்கப்படும் வேலைகளையும் எளிதில் மறந்து விடுவார்கள். இதனை நாம் உணவின் மூலம் சரி செய்யலாம். மூளை சுறுசுறுப்புடன் செயல்படவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், உடலை ஆரோக்கியத்துடன் காக்கவும் உணவுகள் முக்கியமாகும். கர்ப்பகாலங்களில் பெண்கள் மீன்கள் அதிகம் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைகள் நல்ல புத்தி கூர்மையுடன் இருக்கும். குழந்தைக்கு நோய் தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு குறையும். Health Tips: பூக்களில் மருத்துவ குணம்.. இதையெல்லாம் நோட் பண்ணுங்க பாஸ்.!
நட்ஸ், முட்டை, சிகப்பு அரிசி நல்லது:
பால் பொருட்களில் புரோட்டின், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் டி ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. இந்த சத்துக்கள் நரம்பு மண்டலத்தை ஊக்குவிக்கும். மூளை செல்களை செயல்பட வைக்கும். முட்டையில் இருக்கும் சத்து மூளையை சுறுசுறுப்பாக வைக்கும். உடல் வளர்ச்சிக்கும் உதவி செய்யும். இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளை தொடர்ந்து சுறுசுறுப்பாக செயல்பட நட்ஸ் சாப்பிடலாம். அதில் இருக்கும் வைட்டமின் டி அறிவுத்திறனை மேம்படுத்தும். ஓட்ஸ், சிகப்பு அரிசி போன்றவை வைட்டமின் பி மூலக்கூறுகளைக் கொண்டது. இதனால் மூளை ஆரோக்கியத்துடன் இருக்கும்.
கீரை, தேன், காய்கறிகல்நல்லது.
அதேபோல தக்காளி, கேரட், பீன்ஸ், கீரை வகைகளையும் உணவில் சுழற்சி முறையில் சேர்த்துக் கொள்ளலாம். பெர்ரி பழங்கள் மூளையின் செல் இயக்கத்தை மேம்படுத்தும். ப்ரோக்கோலி, பசலைக்கீரை, காலிஃப்ளவர் போன்றவற்றில் உள்ள கனிமச்சத்துக்கள் மூளை ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை ஆகும். தேன் சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும். தினமும் காலை நேரத்தில் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு சத்துக்களையும் வழங்கும். பாதாம், பிஸ்தா போன்றவற்றையும் சாப்பிடலாம். உடலுக்கு தேவையான அளவு நீர் குடிப்பது நல்லது.