How to Move On After One-Sided Love: "உண்மையான காதல் என்றும் மறைவதில்லை".. ஒருதலைகாதலில் இருந்து விடுபட என்ன செய்யலாம்?.. வழிமுறைகள் இதோ.!
ஓர் அடி முன் சென்று.. ஓரிரு வார்த்தைகள் பேசி முடிப்பதற்குள்.. ஓராயிரம் முறை செத்து பிழைக்கிறேன்.. ஒரு தலைக் காதலால்..!
ஜூன் 25, புதுடெல்லி (New Delhi): என்ன தான் உலகம் மாறினாலும், மாறாதது காதல் மட்டுமே. காதலால் தான் உலகம் சுழல்கிறது என்பார்கள். அறிவியல் படி அப்படி இல்லை தான்.. ஆனால் காதலிப்பவர்களின் வாழ்க்கை காதலால் தான் சுழல்கிறது போலும்.
ஒருதலை காதல்: இரு மனம் மட்டுமே புரிந்து உருவாகும் உணர்வாக காதல் இருக்கிறது. அதை வலுக்கட்டாயப்படுத்தியோ பயமுறுத்தியோ மிரட்டியோ வர வைக்க இயலாது. காதலிக்கும் இருவரும் திருமணத்தில் சேர்ந்தால் தான் அது உண்மையான காதலா? ஒருதலை காதல், காதல் தோல்வி அடைந்தவர்கள் இவர்களின் காதலும் புனிதமானவையே. சொல்லபோனால் சேர்ந்த காதலை விட சேராமல் போன காதலுக்கே கனவும் வலியும் அதிகம். அதற்காக ஒருதலையாக காதலித்தவரை (One-Sided Love) கடைசி வரை நினைத்துக் கொண்டு வாழவேண்டும் என்றெல்லாம் கிடையாது.
வன்முறை: ஒருதலை காதலர்கள், தங்கள் காதலை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டாலும், காதல் முறிந்துவிட்டலும் சிலர் மனமுடைந்து தற்கொலை செய்கிறார்கள் அல்லது தன்னை திசை திருப்ப வெறொரு காதலை தேடி செல்வார்கள், இல்லை மது மருந்து தான் தீர்வு என நினைக்கிறார்கள். இதை கூட ஏற்றுக்கொள்ளலாம் அதிலும் ஒரு சிலர் ஒரு படி மேலே போய் தனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என நினைத்து கொலை கூட செய்கிறார்கள். அப்படி செய்வதால் அவர்களுடன் சேர்ந்து காதலும் தான் சாகிறது.
ஒருதலை காதலிலிருந்து விடுபட: ஒருதலை காதல் செய்தவர்களும். காதலில் தோல்வி அடைந்தவர்களும் தங்கள் ஏமாற்றங்களைக் கடந்து செல்ல (Move On) தான் வேண்டும். அதற்கு பல வழிகள் இருக்கின்றன. அவைகளை பின் பற்றி கடந்து செல்லுங்கள். ஒருதலையாக காதலித்து அவர்கள் ஏற்கவில்லை என்றால், அவர்களிடமிருந்து முதலில் விலகிவிடுங்கள். மீண்டும் மீண்டும் போய் பேசுவதாலும் கட்டயப்படுத்துவதாலும் அவர்களுக்கு இன்னும் வெறுப்பு தான் ஏற்படும். BSA Gold Star 650 India Launch: "என்ன மறக்க தூரம் கடக்க என்னோட பைக்கே போதும்.." பிஎஸ்ஏ நிறுவனத்தின் கோல்டு ஸ்டார் 650 பைக் வெளியீடு..!
ஒருவர் தனக்கு விருப்பமில்லை இனி இது சரி வராது என்று கூறிவிட்டால் அவர்களை தொந்தரவு செய்யாமால் இருப்பதே ஒரு சிறந்த கையாளும் முறையாக இருக்கும். அது என்ன காரணமாக இருந்தாலும் சரி. முதலில் தாங்கள் விரும்பியவர் கிடைக்கமாட்டார்கள் என்று புரிந்து கொள்ளவேண்டும். அவர்கள் மேல் கோவமோ வெறுப்போ வந்தால் உங்கள் மனநிலையை மாற்ற வேண்டும். இவையே அவர்களை கொலை செய்யவோ காயப்படுத்தவோ தூண்டும்.
எப்போதும் உங்களை பிஷியாகவே வைத்துக்கொள்ளுங்கள். அவர்களை நினைத்து உங்கள் வாழ்க்கையின் நல்ல நேரங்களை வீண்டிக்காமல் இருக்க வேண்டும். உங்களிடம் அவர்களின் பொருட்கள் அல்லது நினைவாக ஏதாவது இருந்தால் தூக்கி போட வேண்டும் என்று கிடையாது ஆனால் அதை பார்த்து பார்த்து ஏங்காமல் இருக்க சிறிது காலம் மறைத்துவைக்கலாம். காதல் வலி வாழ்வில் அனைவரும் அனுபவித்த ஒரு வலி ஆகும். பாடல், படம், வெளியில் சென்ற இடம், பேசியது என அனைத்தும் நினைவில் வந்து கொண்டே தான் இருக்கும். அதிலிருந்து விடுபட முடிந்தால் உங்கள் இருப்பிட சூழ்நிலையை மாற்றலாம். TN Weather Update: திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
நண்பர்களுடன் சுற்றுலா தளங்களுக்கு சென்று திசை திரும்பலாம். சிலர் காதல் தோல்வி அடைந்தவுடன் வேறொரு காதல் தேடி செல்வார்கள். அப்போது எடுக்கும் எந்த ஒரு முடிவும் தவறாகத்தான் இருக்கும். மனஅழுத்தற்கும் ஆளாக நேரிடும். மிகவும் அதிலிருந்து வெளிவர முடியாமல் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது போன்று தோன்றினால் ஆலோசகரிடம் செல்வது சிறந்தது. முடிந்த வரை தாமாகவே வெளிவர பழக வேண்டும்.