BSA Gold Star 650 (Photo Credit: @motocasco1 X)

ஜூன் 25, புதுடெல்லி (New Delhi): மஹிந்திரா நிறுவனம் நடத்தி வரும் பிஎஸ்ஏ (BSA) என்ற நிறுவனம் இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 (BSA Gold Star 650) என்ற பைக்கை இந்தியாவில் களம் இறக்க முடிவு செய்துள்ளது. இந்த பைக்கானது பழைய பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள் லுக்கில் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான குரோம் பாகங்கள் உள்ளன. TikTok Star and Executioner Shahjahan Bouya Dies: கொலையாளிகளை தூக்கிலிட்ட டிக்டாக் நட்சத்திரம் ஷாஜகான் பௌயா.. நெஞ்சு வலியால் மரணம்..!

சிறப்பம்சங்கள்: இந்த பைக்கில் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் பெட்ரோல் டேங்க் நீர் துளியின் வடிவமைப்பில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் பிளாட் சீட்டு மற்றும் வயர்டு ஸ்போக் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி முன் பக்கம் 320 மிமீ, பின்பக்கம் 255 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கின் இன்ஜினை பொறுத்தவரை 652 சிசி லிக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் டிஓஎச்சி 4 வால்வு இன்ஜின் 2 ஸ்பார்க் பிளக்குடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் 12 லிட்டர் டேங்க் கொள்ளளவு கொண்டதாகவும், 213 கிலோ எடை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.