Electrical Safety Tips: மழைக்காலம் ஆரம்பமாயிருச்சு.. மின் ஷாக்கில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்..!
மழை காலத்தில், மின்சாரம் தாக்கி இறக்கும் சம்பவங்கள் குறித்து நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். எனவே, இக்காலத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மே 28, சென்னை (Chennai): இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தால் கொல்லப்படுகிறார்கள் அல்லது காயம் அடைகிறார்கள். இவற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு சில வழிமுறைகள் (How to Prevent Electrical Shock) இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்காக்கும் வழிகள்: குறிப்பாக மழைக்காலங்களில் மின்கசிவு சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றது. எனவே நாம் ஒரு பகுதிக்கு செல்லும் பொழுது அங்க மின் கசிவு ஏதேனும் உள்ளதா பரவி உள்ளதா என்பதனை முதலில் சரிபார்க்க வேண்டும். ஸ்விட்ச் போர்டை அணைக்க மரம் மற்றும் அட்டை பலகை போன்றவற்றை பயன்படுத்தவும். யாரையும் மின்சாரம் தாக்கி சிக்கி இருந்தால் அவர்களை நேரடியாக தொடக்கூடாது. மரக்கட்டையால் அல்லது குச்சியால் அவரை அப்புறப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
மின்சாரம் தாக்கினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்: மின்சாரம் தாக்கிய பின் தோல் எரிந்தால், சுத்தமான துணியால் அவ்விடத்தை கட்ட வேண்டும். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்கவும். மின்சாரம் பாதிக்கப்பட்டு ஒருவர் தரையில் விழுந்து அசையாமல் இருந்தால் அவருக்கு கார்டியோ நுரையீரல் புத்துயிர் பெற முதலுதவி அளிக்கவும். முதலுதவி அளித்த பின்பு அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும். மின்சாரம் தாக்கிய பிறகும் பாதிக்கப்பட்ட நபர் நலமாக இருந்தாலும் மருத்துவரிடம் சிறிய சோதனை செய்து கொள்ள வேண்டும். இது உன் காயங்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும். National Kickboxing Tournament: தேசிய கிக் பாக்சிங் போட்டி.. தங்கம் வென்றவர்களுக்கு வரவேற்பு..!
மின்சாரத் தாக்குதலால் ஏற்படும் பிரச்சனைகள்: மங்கலான பார்வை, தலைவலி, பதற்றம், காது கேட்பதில் சிரமம், வாயில் புண்கள் போன்றவைகள் மின்சாரம் தாக்கிய பிறகு ஏற்படலாம். மேலும் கைகளிலும் கால்களிலும் கூச்ச உணர்வு போன்று ஏற்படும். சில நேரங்களில் தீக்காயங்கள், உடல் உறுப்புகள் செயல் இழப்பு, மாரடைப்பு, மூளை பாதிப்பு, ரத்தம் உறைதல், மூச்சுத் திணறல் போன்றவைகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.
வீட்டில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பழுதடைந்த அல்லது மோசமான நிலையில் உள்ள மின்சார சாதனங்களை பயன்படுத்தக் கூடாது. சேதம் அடைந்த வயர்களையும் பயன்படுத்தக் கூடாது. மின்விளக்குகளை மாற்றுவதற்கு முன் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். குளியலறையில் ஹேர் டிரெயரை பயன்படுத்தக் கூடாது. ஈரமான கையுடன் ஸ்விட்ச்களை போடக்கூடாது. ஏனெனில் இன்றைக்கு நாம் அனைவரும் ஸ்மார்ட் சாதனங்களை தான் அதிகமாக பயன்படுத்துகின்றோம். நாம் ஈர கையினால் அவற்றினை தொடும்பொழுது அவைகள் பழுதடையலாம் அல்லது நமது உயிருக்கும் ஆபத்து ஏற்படும். Woman Doctor Death: மின்சாரம் தாக்கி பெண் மருத்துவர் பலி; லேப்டாப் சார்ஜர் உயிரை பறித்த சோகம்..!
அதே நேரம் ஸ்மார்ட் சாதனங்களான ஜாய்ஸ்டிக், லேப்டாப், மொபைல் போன் சார்ஜர்கள் போன்றவற்றின் நுனிக் கம்பியை தொட்டால் கூட ஷாக் அடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஈரமான கைகளினால் தொடும்பொழுது அவை சேதாரம் ஆகும் அல்லது சார்ஜர் எண்ட் பாயிண்டில் உள்ள ஈரத்துடன் நேரடியாக போனுக்கு சார்ஜ் போட்டால், மொபைல் போன் சேதமாகவும் வழிவகுக்கலாம். எனவே ஈர கைகளினால் ஸ்மார்ட் சாதனங்களை தொடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் வீடுகளில் RCCB கண்டிப்பாக உபயோகப்படுத்த சொல்ல வேண்டும். ஏனென்றால் வயரிங் தவறாக இருந்தாலும் காட்டி கொடுத்துவிடும். மேலும் சிறிய ஷாக் அடித்தாலும் டிரிப் ஆகி நமது உயிரை பாதுகாக்கும்.
புதிதாக வீடு கட்டுவோர் மின்சாரம் சார்ந்த விஷயங்களில் சிக்கனத்தை கடைபிடிக்காமல், தரமான பொருட்களை கேட்டறிந்து வாங்கி பயன்படுத்த வேண்டும். அதேபோல, வாடகை வீடுகளில் இருப்போர் அல்லது சொந்த வீடுகளில் இருப்போர் வீட்டின் எர்த் நிலையை கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். இவை அனைத்தும் மின்சாரம் சார்ந்த தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாக்க உதவி செய்யும்.
உங்களுக்கு வேறேதேனும் ஆலோசனை இருந்தாலும் கருத்துப்பக்கத்தில் அதனை பகிர்ந்து செல்லுங்கள்.. என்றாயினும் உங்களின் கருத்தும் உதவும் அல்லவா...
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)