Soft Drinks: குளிர்பானம் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனை; அதிர்ச்சியை தரும் பகீர் தகவல்.!

ரசாயனங்கள் மற்றும் நீர், சோடா போன்றவை சேர்த்து தயாரிக்கப்படும் பானங்கள் உடல் நலனுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தவல்லவை ஆகும்.

Soda Drinks (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 05, சென்னை (Health Tips): இன்றளவில் தினமும் காலை எழுந்ததும் பலருக்கும் டீ, காபி போன்றவை இல்லாமல் அந்நாளே தொடங்குவது இல்லை. சிலர் காப் அல்லது டீ கிடைக்காத பட்சத்தில், அந்நாளே தங்களுக்கு வழக்கம்போல் இயங்காது எனவும் கூறுவார்கள். அதனைப்போல, இன்றுள்ள காலத்தில் குளிர்பானங்கள் பலருக்கும் பிடித்த ஒன்றாக மாறிவிட்டது. குழந்தைகளில் தொடங்கி பெரியவர்கள் வரை அதனை விரும்புகின்றனர். Murungai Keerai Kulambu Recipe: உடலுக்கு சத்தான முருங்கை கீரை குழம்பு செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

உடல்நலக்கோளாறுகள் உண்டாகும்:

இவ்வாறான குளிர்பானங்கள் சுவை ஒருமுறை பழகிப்போனால், அதனை அடிக்கடி வாங்க விரும்பும். செயற்கையான ரசாயனங்கள் சேர்த்து விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். இதில் கெமிக்கல், நீர் தவிர்த்து எதுவும் இருக்காது. ஒருசிலர் சாப்பிட்ட உணவு செரிமானம் அடைய குளிர்பானத்தை குடிக்கின்றனர். இதனால் பல உடல்நல கோளாறுகள் ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. Potato Mixture Recipe: உருளைக்கிழங்கை பயன்படுத்தி சத்தான மிச்சர் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..! 

புற்றுநோய் அபாயம்:

முடிந்தளவு குளிர்பானங்களை குடிக்காமல் தவிர்ப்பது உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுனர்களும் அறிவுரை வழங்குகின்றனர். இதில் சேர்க்கப்பட்டுள்ள அதிக சர்க்கரை, உடற்பருமனை அதிகரிக்கும். டைப் 2 நீரிழிவு நோய்க்கும் வழிவகை செய்யும். குளிர்பானத்தில் சேர்க்கப்படும் சில ரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.