Murungai Keerai Kulambu (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 03, சென்னை (Kitchen Tips): கீரைகளில் பல வகைகள் உண்டு. அந்த கீரையை கொண்டு பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். எப்போதும் கீரைக்கூட்டு, கீரை பொரியல், கீரை மசியல், கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை கீரை குழம்பு செய்து சாப்பிடலாம். அந்தவகையில் முருங்கை கீரை குழம்பு (Murungai Keerai Kulambu) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 2

முருங்கை கீரை - 2 கைப்பிடி அளவு

தக்காளி - 1

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

சாம்பார் தூள் - அரை தேக்கரண்டி

எண்ணெய் - 2 கரண்டி

கடுகு - 1 கரண்டி

உப்பு - தேவையான அளவு. Potato Mixture Recipe: உருளைக்கிழங்கை பயன்படுத்தி சத்தான மிச்சர் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

செய்முறை:

முதலில் முருங்கை கீரையை (Drumstick Spinach) நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் உருகி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம், தக்காளியை அரிந்து கொள்ளவும்.

அடுத்து மிக்சியில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு வெங்காயம், தக்காளி, சோம்பு சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் தாளிக்க எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். அடுத்து சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

மசாலா வாசனை நன்றாக போகும் வரை கொதிக்க வைக்கவும். அடுத்து முருங்கை கீரையை சேர்த்து வேக வைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான முருங்கை கீரை குழம்பு ரெடி.