World No Tobacco Day 2024: "புகையிலை சுவைத்து மகிழ்ந்திடுவாய் - அது உன்னுயிர் சுவைப்பதை நீ அறியாய்..." உலக புகையிலை எதிர்ப்பு தினம்..!

உலக புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

No Tobacco (Photo Credit: Pixabay)

மே 31, புதுடெல்லி (New Delhi): புகையிலை பயன்படுத்துவதால் ஒரு ஆண்டிற்கு எட்டு மில்லியன் வரை இறப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் மட்டும் புகையிலையால் ஆண்டுக்கு குறைந்தது 8 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இத்தகைய புகையிலையை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக புகையிலை எதிர்ப்பு தினம் (World No Tobacco Day) உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த நாள் உலக சுகாதார அமைப்பு (WHO) தலைமையில் அனுசரிக்கப்படுகிறது.

வரலாறு: 1560-ல் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீன் நிகாட் என்பவர் புகையிலையை அறிமுகப்படுத்தினார். அவரது பெயரிலிருந்தே நிகோடின் என்ற வார்த்தை உருவானது. பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப்படுகிறது. சிகரெட் தயாரிப்புக்காக 60 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் 27 கோடி பேர் புகைக்கின்றனர். 13 முதல் 15 வயது வரையிலான ஐந்தில் ஒரு பங்கு மாணவர்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புகையிலை 25 வகையான நோய்களையும், சுமார் 40 வகையான புற்றுநோய்களையும் உண்டாக்கும். All Eyes On Rafah: இஸ்ரேலின் தாக்குதல்.. வைரலாகும் ஆல் ஐஸ் ஆன் ரஃபா ஹேஷ்டேக்..!

பாதிப்புகள்: புகையிலை குடிப்பதினால் புற்றுநோய், கண், நுரையீரல் உட்பட்ட உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படும். மேலும் தோலில் சுருக்கம் ஏற்படும். இதனால் இளம் வயதிலேயே முதுமை அடைந்தது போல் காணப்படுவார்கள். அதுபோல வாய் துர்நாற்றம், இருமல், மஞ்சள் நிறத்தில் பற்கள், கைவிரல்கள் கருப்பாகும் மற்றும் ரத்த சோகை போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதுமட்டுமின்றி எலும்பின் ஆரோக்கியம் பாதிக்கப்படும், மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். ஒருவர் புகை பிடிப்பதால் அருகில் நிற்பவருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.