மே 30, காசா (World News): இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் (Israel Hamas War) கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது. இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 35 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதனை நிராகரித்து விட்டார். மேலும் 14 இலட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் இப்போது தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் தான் தாக்குதல் நடத்தி வருகிறது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் மே 26 ஆம் தேதி குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. Lok Sabha Elections 2024: கருத்துக் கணிப்பு வெளியிட்ட நந்திகோஷா டிவி.. கடும் நடவடிக்கை எடுத்த இந்திய தேர்தல் ஆணையம்.. ஒடிசாவில் பரபரப்பு..!
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” (All Eyes On Rafah) என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. அதேபோல் ஏஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” புகைப்படமும் வேகமாகப் பரவியது. இஸ்டாகிராமில் இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.