Senior Citizen Savings Scheme: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்.. அதன் பயன்கள் என்னென்ன?.!

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்பது இந்திய அரசால் நடத்தப்படும் சிறு சேமிப்புத் திட்டமாகும்.

Saving Schemes (Photo Credit: Pixabay)

ஜூலை 04, புதுடெல்லி (New Delhi): தபால் நிலையங்களில் (Post Office) பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. மக்கள் தற்போது வங்கிகளை போல் தபால் நிலைய திட்டங்களில் இணைந்து பணத்தை சேமித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தபால் நிலைய திட்டங்கள் நேரடியாக மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவது தான்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: இந்திய மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு (SCSS) என்றால் அஞ்சலக சேமிப்பு மிக சிறந்த ஒன்றாகும். 55 முதல் 60 வயதிற்குற்பட்ட ஓய்வு பெற்ற தனிநபர்கள் இத்திட்டத்தில் (Senior Citizen Savings Scheme) கணக்கைத் தொடங்கலாம். இதிலும் வட்டி விகிதம் ஆண்டிற்கு ஆண்டு மாறுபடும். Koo App Shuts Down: இந்தியாவின் டிவிட்டர் ’கூ’க்கு.. நிரந்தர 'ஊ'.. நிதி நெருக்கடியால் வந்த சோகம்..!

மூன்று மாதத்திற்கு ஒரு முறை வட்டித் தொகை வங்கிக் கணக்கிற்கு வரும். இதில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். வைப்புத்தாரர் கணவன் அல்லது மனைவியுடன் இணைந்து கணக்குகளை தொடங்கலாம். ஒரு ஆண்டு முடிவதற்கு முன்னரே கணக்கை மூடவேண்டுமென்றால் வைப்புதொகையின் மதிப்பில் 1.5% சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும். இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும் நீட்டிக்க விரும்பினால் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.