Tata Consultancy Services (Photo Credit: @indianweb2 X)

செப்டம்பர் 19, இந்தூர் (Madhya Pradesh News): டாடா கன்சல்டன்சி நிறுவனம் (TATA Consultancy Services Company) இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தில் ஒன்றாகும். இந்நிறுவனத்தில் நேரடியாக 6 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் டாடா நிறுவனம் தனது தொழில்நுட்ப சேவையையும் வழங்கி வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் சுமார் 1,000 பேரை டாடா நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகியது. இந்த விசயம் குறித்து அம்மாநில அமைச்சர் ஜெகதீஷ் தேவா, டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி கீர்த்திவாசனுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதத்துக்கு பதிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Gemini AI Couple Photo Prompts: ரெட்ரோ Couple முதல் சிறுவயது நினைவை கட்டியணைப்பது வரை.. உங்களுக்கான டிரெண்டிங் பிராம்ட்ஸ்.! 

அலுவலக மாற்றம் ஏன்?

இதுதொடர்பான விளக்க டிசிஎஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாவது, "டிசிஎஸ் போபால் எந்த விதமான வேலை வெட்டு தொடர்பான நடவடிக்கையிலும் எடுபடவில்லை. போபால் வளர்ந்த நகரமாக, பல்வேறு தொழில்நுட்ப செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கிறது. போபாலில் செயல்படும் கிளையின் இடத்தை விட, இந்தூரில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் ஒரே நேரத்தில் 10,000 பேர் வரை பணியாற்றலாம். ஆகையால், பணியிட மாறுதல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வேலை இழப்பு தொடர்பான செய்திகளில் உண்மை இல்லை. அவர்களின் பணியிடம் மாற்றப்பட்டுள்ளது. போபாலில் 1,000 பேர் மட்டுமே வேலை பார்க்கும் சூழலில், இந்தூரில் 10,000 பேரின் வேலைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" என பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.