Chandipura Virus: பரவி வரும் சண்டிபுரா வைரஸ்.. தமிழ்நாட்டிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. தப்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன?!
குஜராத்தில் சண்டிபுரா வைரசால் பாதிக்கப்பட்ட ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜூலை 19, குஜராத் (Gujarat News): இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸ் (Chandipura) என்னும் புதிய வகை வைரஸ் (Virus) பரவி வருகிறது. இந்த வைரசால் இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் குறிப்பாக சிறு வயதினரே அதிகமாக இறக்கின்றனர்.
வரலாறு: சண்டிபுரா வைரஸ் என்பது சண்டிபுரா வெசிகுலோவைரஸ் (CHPV), ராப்டோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆர்என்ஏ வைரஸ் ஆகும்.. நாய்க் கடியால் ஏற்படும் ரேபிஸ் வைரஸும் இதில் தான் அடங்கும். 1965ம் ஆண்டு மூளைக் காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் கூடிய சந்திபுரா தொற்று மகாராஷ்டிராவில் உள்ள சந்திபுராவில் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஆந்திர பிரதேசம் மற்றும் குஜராத்திலும் சந்திபுரா தொற்று உறுதி செய்யப்பட்டது. குஜராத்தில் குறிப்பாக வடக்கு மற்றும் மத்திய குஜராத் மாவட்டங்களில் இந்த நோய் தொற்று ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் ஏற்படும் இந்த தொற்று குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகம் காணப்படுகிறது. Mari Selvaraj Opens Up: "சாதி மறுப்பு திருமணம்தான் நாடகக் காதல்" - வாழை படவிழாவில் பேசிய மாரி செல்வராஜ்..!
தமிழ்நாட்டின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சண்டிபுரா வைரஸ் குறித்து அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதார தடுப்பு மருந்து துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிக்கை அனுப்பியுள்ளார். அதில் குஜராத்தில் குழந்தைகள் இடையே சண்டிபுரா வைரஸ் பரவி வருவதாகவும் அது அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. இது கொசு ஒருவகை சிறிய பண்டு மூலம் பரவக்கூடியது. எனவே இது வராமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழகத்தில் சண்டிபுரா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. இருப்பினும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிகுறிகள்: தீவிரமான காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, வலிப்பு, தூக்கமின்மை, உணர்வற்ற நிலை, தொற்று ஏற்பட்ட சில மணி நேரத்தில் கோமாவுக்கு செல்லுதல், தோலில் புள்ளிகள் ஏற்படுதல் போன்றவைகள் இந்த நோயின் அறிகுறிகள் ஆகும். சண்டிபுரா வைரஸ், மணல் ஈக்களால் பரவக்கூடியது. சில நேரங்களில் கொசுக்கள் மூலமாகவும் இவை பரவுகின்றன. TN Weather Update: புயல் எச்சரிக்கை.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
சிகிச்சை: சண்டிபுரா வைரஸ் தொற்றுக்குக் குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. நோய் அறிகுறிகள் தென்பட்ட உடனேயே முதலில் மருத்துவமனைக்குச் செல்லுங்கள். அதுவே முதன்மையானது. கடுமையான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள், குறிப்பாகக் குழந்தைகளுக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படும். உடலில் நீர்ச் சத்து குறைபாடு ஏற்படலாம்.