ஜூலை 19, சென்னை (Cinema News): மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ (Vaazhai) படத்தின் முதல் சிங்கிள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இது தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை 'ரெட் ஜெயன்ட்' நிறுவனம் வெளியிடுகிறது. டிஜிட்டல் உரிமத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) வாங்கியுள்ளது.
மாரி செல்வராஜ் ஓபன் டாக்: இப்பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியதாவது, "நான் சினிமாவில் முதன் முதலில் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்ட படம் வாழை. இந்த படத்தை எடுத்த பின்னர்தான் அடுத்த படங்களை எடுக்கவேண்டும் என நான் முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் அதன் பின்னர் நான் படித்த புத்தகங்கள், பார்த்த படங்கள் மூலம் ஏற்பட்ட புரிதலில் வாழை படத்தினை மிகவும் பொறுமையாக எடுக்கவேண்டும் என்பதை புரிந்துகொண்டு, அதே அளவிற்கு வலியை ஏற்படுத்தக்கூடிய, பரியேறும் பெருமாள் படத்தின் கதையை எழுதினேன். Baby Killed By Father: பிறந்து 9 நாளே ஆன குழந்தை.. கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த கொடூர தந்தை..!
வாழை படத்தினை நான் எடுக்க முக்கிய காரணம் உள்ளது. என்னை நோக்கி வரும் கேள்விகளில், மிகவும் முக்கியமான கேள்விகளில், " மைக் கிடச்சா என்ன வேணாலும் பேசுவீங்களா? உங்க படத்துல இப்படித்தான் படம் எடுப்பீங்களா? எதற்காக இவ்வளவு உணர்ச்சியாக படங்கள் எடுக்கின்றீர்கள், ஒரு படம் எடுத்துட்ட என்ன வேணாலும் பேசுவீங்களா?" உள்ளிட்ட கேள்விகள்தான். என்னை நோக்கி இப்படியான கேள்விகளை முன்வைப்பவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த படம் இருக்கும்.
என்மீது விமர்சனம் உள்ளவர்கள் என்னைப் புரிந்து கொள்வதற்காகவே இந்த படத்தினை எடுத்துள்ளேன். என்மீது அன்பு வைத்திருப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் அவர்களின் அன்பு இன்னும் அதிகரிக்கும் என நினைக்கின்றேன். நான் எதோ ஒரு கதையை இயக்கினால் எனக்கு பிரச்னையே இருக்காது. ஆனால் நான் எனது வாழ்க்கையை இயக்குகின்றேன்.நான் சந்தித்த மக்கள் குறித்து இயக்குகின்றேன். அதனால்தான் இவ்வளவு உணர்வுப்பூர்வமாக உள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது. மேலும், மாமன்னன் படத்தின் கதையையும் எழுதி முடித்துவிட்டேன். ஆனால் இந்த படத்தினை அப்படியே வைத்துள்ளேன் என மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. மாமன்னன் படப்பிடிப்புக்கு இடையில் எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த படத்தை எடுத்துக்கொண்டு இருந்தேன். இப்போது படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. Child Abuse: 12 வயது சிறுமிக்கு முத்தம்.. அந்த போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்ட வாலிபர்.. நடுரோட்டில் வைத்து அடித்த பெற்றோர்..!
இயக்குநர் ராம் சார் என்னிடம் , உன்னுடைய நோக்கம் படம் எடுத்து பணம் சம்பாதிப்பது அல்ல. மாறாக, உனது கதையை நீ எப்போதும் அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அதில் இருந்து பின் வாங்கிவிடாதே. உன்னுடைய கதை என்பது உன்னுடையது மட்டும் இல்லை. உனக்குப் பின்னால் வரக்கூடிய சந்ததியரின் கதை" என எப்போதும் கூறுவார்.
நாடகக் காதல்: இன்றைக்கு எனது மனைவி எனகு மிகவும் உறுதுணையாக இருக்கின்றார். நாடகக் காதலின் மூலம் நாம் ஏதோ ஒன்று செய்திருக்கின்றோம் என நம்புகின்றேன். நாடகக் காதல் என்றால் உங்களுக்கு புரிந்திருக்கும், சாதி மறுப்பு திருமணம்தான் நாடகக் காதல். அப்படி நாடகக் காதலின் வழியே நான் ஏதோ ஒன்றைச் செய்துள்ளேன் என்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அந்த வகையில், என்னோட வாழ்க்கையில் இன்று முக்கியமான நாள். என்னோட காதலி, என்னோட திவ்யாவைவைத்து என்னுடைய வாழ்க்கை இந்த படம் வெளியாகின்றது. குறிப்பாக என்னுடைய கதை என்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகவும் துயரமான சமவத்தை எனது மனைவி தயாரித்து அது படமாக வெளிவரும் என நான் கனவிலும் நினைத்ததில்லை" என பேசியுள்ளார்.