Soorasamharam: சூரஸம்ஹார வரலாறு என்ன?.. பக்தகோடிகளே முருகனை தரிசிக்க தயாராக இருங்கள்..!

தமிழர்கள் பெருமளவு போற்றும் ஆறுபடை வீரன் முருகனின் சிறப்புமிக்க திருச்செந்தூர் வரலாறு தொடர்பான அட்டகாசமான தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.

File Image: Soora Samharam Festival, Tiruchendur.

டிசம்பர், 10: வரலாற்றில் (History) காசியப்ப முனிவர் - மாயை தம்பதிக்கு மகனாக பிறந்த சூரபத்மன் (Asura Surapadman), வளர்ந்த பின்னர் சிவபெருமான் (Lord Shiva) மீது பெற்றுக்கொண்டு நெடுந்தவம் புரிகிறார். தவத்தின் வலிமையால் இந்திரா ஞாலம் என்ற தேர், பெண்ணால் பிறக்காத குழந்தையால் மட்டுமே மரணம் எனவும் வரம் பெறுகிறார்.

வரத்தை பெற்றதும் அதனை கொடுத்தவன் தலையில் கைவைக்க முயல்வது போல அப்பாவி மனிதர்கள், முனிவர்கள் போன்றோரை கொடுமை செய்து கொன்று குவிக்கிறார். அவரின் அட்டகாசத்தை ஒடுக்க சிவனின் ஆறு முகத்தில் இருந்து பிறந்த ஆறு நெருப்பு பொறிகள் வாயு பகவானால் சரவண ஒப்படைக்கப்படுகிறது. Mobile Number 10 Digit: இந்தியர்களின் மொபைல் நம்பர் எதற்காக 10 இலக்கங்களை கொண்டுள்ளது தெரியுமா??.. அசரவைக்கும் அசத்தல் தகவல் இதோ.! 

Tiruchendur Murugan

கார்த்திகை பெண்களிடம் வளர்த்த முருகனை அன்னை பார்வதி ஆரத்தழுவி முருகனை சண்முகராக்கி வேலினையும் கொடுக்கிறார். தாயிடம் வேல் பெற்ற முருகன் போர்கொண்டு சூரபத்மனை அழிக்கும் நிகழ்வே சூரசம்ஹாரம் எனப்படுகிறது. போரின் போது முருகனுக்கு வீரபாகு உட்பட நவவீரர்கள் முருகனுக்கு படைத்தளபதியாக செயல்பட்டனர் என்பது வரலாறுகளில் கூறப்பட்டுள்ள தகவல் ஆகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். சூரபத்மனை முருகன் போரில் வெல்லும் காட்சிகள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்படும். அன்றைய நாளில் சூரசம்ஹாரம் நிகழ்வை காணவும், முருகனை தரிசனம் செய்யவும் இலட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்திரில் குவிந்து இருப்பார்கள்.

முருகனை அவனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் சென்று தரிசனம் செய்தால் நலன் உண்டாகும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10, 2022 05:41 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif