Negative Thought in Mind: மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை அகற்றுவது எப்படி?.. மன ஆரோக்கியம் மேம்பட இதை செய்து பாருங்கள்.!
இவை தவிர்க்கப்பட வேண்டும்.
டிசம்பர் 11, சென்னை (Chennai): இன்றளவில் தங்களின் மனம் நோகும் வகையிலான நிகழ்வு நாணத்தால், அதுகுறித்த சிந்தனையிலேயே வலம்வருபவர்கள் ஏராளம். பிறர் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் விஷயத்தினை, இவர்கள் தங்களின் மனதில் போட்டு குழப்பமடைவார்கள். அதில் இருந்து மீளுவதற்கும் அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள்.
காயத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள்: இடைப்பட்ட காலத்தில் அவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவம் நிலைத்து நிற்கும். இவ்வாறு நாம் செய்திருக்கலாமே? அவ்வாறு செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? என மனதை தொடர்ந்து ரணமாக்கி கஷ்டப்படுவார்கள். நமது மனம் என்பது விசித்திரமான குணத்தினை கொண்டது. மனதளவில் காயத்தை ஏற்படுத்தும் நிகழ்வு நடந்தால், அதனை உடனடியாக சிந்திக்க தொடங்கும்.
துவண்டுவிடும் மனம்: அச்சமயத்தில், நமது மனதினை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாத பட்சத்தில் மனம் கவலையில் துவண்டுவிடும். எப்போதும் மனரீதியான அழுத்தம் இல்லாத வாழ்க்கையை ஏற்படுத்த முஅயற்சிக வேண்டும். தேவையில்லாத சிந்தனைகள் மனசோர்வு, மனநோய் போன்றவைக்கு வழிவகை செய்யும். மூளையின் செயல்பாடுகளும் அடுத்தடுத்து முடங்கும். Tesla Automatic Car Emergency Call: கார் விபத்தில் சிக்கினால் உடனடியாக அவசர அழைப்புக்கு தொடர்பு: டெஸ்லா அதிரடி அறிவிப்பு.!
சிந்தனைய கட்டுப்படுத்துங்கள்: இதனால் மனநலன் என்பது ஒவ்வொரு தனி மனிதருக்கும் முக்கியமானது ஆகும். அதிகளவு எந்நேரமும் சிந்தித்துக்கொண்டு இருப்பது மனதிற்கு மட்டுமல்லாது, உடலின் ஆரோக்கியத்திற்கும் கேடுதரும். மனஅழுத்தம், பதற்றம் போன்றவை உடலின் செயல்பாடுகளில் தாக்கத்தினை உண்டாக்கி, நமது மனம் கட்டுக்குள் இல்லாமல் போகும். இதனால் சிந்தனையை ஒருங்கிணைத்து கட்டுப்படுத்த வேண்டும்.
மனதை சாந்தப்படுத்துங்கள்: நமது மனக்கட்டுப்பாடு இழக்கப்படுவதாக உணரும் பட்சத்தில், அதுசார்ந்த சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும். அச்சமயத்தில், மூச்சினை ஆழமாக உள்ளிழுத்து வெளியே விடுதல், மனதின் அழுத்தத்தை சாந்தப்படுத்தும். தியானம் செய்வதும், அமைதியான சூழலில் கண்களை 2 நிமிடம் மூடி அமர்வதும் நல்லது. Sexually Assault on Blackout: இருட்டான சூழ்நிலையை பயன்படுத்தி பெண் பயணியிடம் அத்துமீற முயன்ற இளைஞர்: அதிர்ச்சி தகவலை பகிர்ந்த பெண்மணி.!
பிடித்த விஷயத்தை செய்து மகிழுங்கள்: சிந்தனையை மாற்றுவதற்கு, வேறொரு விஷயத்தில் கவனத்தை செலுத்தலாம். பிறருக்கு நன்மை பயக்கும் விஷயத்தினை செய்யலாம். அவர்கள் கூறும் நன்றி மகிழ்ச்சியை ஏற்படுத்தி மனநிறைவை வழங்கும். இயல்பாக கடந்துபோகும் விஷயங்களுக்கு பதற்றமடையும் நபர்கள், அவர்களின் சிந்தனை காரணமாக அவதிப்படுகின்றனர். மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணத்தினை முற்றிலும் வெளியேற்ற இயலாது எனினும், அதனை குறைக்க முயற்சிக்க வேண்டும்.
ஊக்கமது கைவிடேல்: கவலைகள் நமது மனதை கட்டுக்கடங்காமல் சூழ்ந்திருந்தாலும், அவற்றை கண்டுகொள்ளாமல் நமது பணிகளில் திறம்பட செயல்பட்டால் கவலைகள் ஓடிப்போகும். செய்த தவறுகளில் இருந்து திருந்தி, அதனை மீண்டும் செய்யாமல் இருப்பது நல்லது. அந்த விஷயத்தை மனக்கவலைக்கு ஊக்கப்புள்ளியாக எடுத்து செயல்பட வேண்டும்.