Aloe Vera Curry: சோற்றுக்கற்றாழையில் சுவையான குழம்பு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க.!

இது உடலுக்கு பல நன்மையை வழங்கும்.

Aloe Vera Curry (Photo Credit: Amazon.com / Facebook)

நவம்பர் 25, சென்னை (Health & Cooking Tips): தமிழக மருத்துவ பாரம்பரியத்தில், கற்றாழையின் பயன்பாடு என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து புழக்கத்தில் இருந்து வருவது ஆகும். தமிழகத்தில் உள்ள பல கிராமங்களில் கற்றாழை இன்றும் வீட்டில் வளர்க்கப்பட்டு வருகின்றன. வயல்வெளிகளில் தானாக வளரும் தன்மை கொண்ட கற்றாழை, தன்னகத்தை பல மருத்துவ குணங்களையும் கொண்டதாகும்.

இது பல உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது. அழகு சாதன பொருட்கள், உணவுப் பொருட்கள், உடல் எடையை குறைக்க தயாரிக்கப்படும் விஷயங்களுக்கு கற்றாழை உதவி செய்கிறது, பிரதானமாகவும் பயன்படுத்தப்படுகிறது. சோற்றுக்கற்றாழையில் இருக்கும் ஜெல்லை எடுத்து, சாறு போல தயாரித்தும் பருகலாம். இதை காய்கறி போல குழம்பு செய்தும் சாப்பிடலாம். Cuddalore Shocker: காதல் திருமணத்தை கண்டித்த தாய் கொலை., வீட்டில் குழிதோண்டி புதைப்பு: கஞ்சா குடிக்கியான 22 வயது இளைஞரால் பயங்கரம்.! 

கற்றாழை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

கற்றாழை - தோல் நீக்கியது,

நல்லெண்ணெய் - 5 கரண்டி,

கடுகு, வெந்தயம் - தலா கால் கரண்டி,

சீரகம் - கால் கரண்டி,

கறிவேப்பில்லை - சிறிதளவு,

புளி - சிறிதளவு,

சின்ன வெங்காயம் - 150 கிராம்,

பூண்டு - 10 பற்கள்,

தக்காளி நறுக்கியது - 3,

மிளகாய் தூள் - ஒரு கரண்டி,

மஞ்சள் தூள் - கால் கரண்டி,

கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை:

முதலில் நாம் எடுத்துக் கொண்ட சோற்றுக்கற்றாழையை தோலை நீக்கி மூன்று முதல் நான்கு முறை நன்கு கழுவி வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். Hide and Seek Game Ends Death: ப்ரீசரில் ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி விளையாடிய சகோதரிகள் பரிதாப பலி: பெற்றோர்களே உஷார்.! 

இவை வதங்கிய பின்னர், சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். சின்ன வெங்காயம் வதங்கியதும், சோற்றுக்கற்றாழைகளை சேர்த்து பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

இவை அனைத்தும் வதங்கியதும், மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

சிறிதளவு நீர்விட்டு கட்டி பத்துடன் குழம்பை தயார் செய்யுமாறு பார்த்துக்கொண்டு, இறுதியாக புளிக்கரைசலில் சேர்க்க வேண்டும். புளிக்கரைசல் நன்கு கொதித்ததும் கடாயை இறங்கினால், சுவையான கற்றாழை குழம்பு தயார்.