Brinjal Gravy: சுவையான கத்தரிக்காய் கொத்சு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
சாம்பார், கறி வகை என கத்தரிக்காயை வைத்து சாப்பிட்டு பழகியவர்கள், சற்று மாறுதலாக கொத்சு செய்து சாப்பிடலாம்.
டிசம்பர் 31, சென்னை (Chennai): தினமும் நாம் பல்வேறு வகையான குழம்பு வகைகளை செய்து சாப்பிடுவோம். அதற்கு தொடுகறியாக சீசன் நேரங்களில் கிடைக்கும் பிரதானமான காய்கறிகளை அதிக அளவில் பயன்படுத்துவோம். இதில் கத்தரிக்காய் என்பது பலரின் விருப்ப உணவாக இருந்த வருகிறது. கத்தரிக்காயில் குழம்பு, சாம்பார், தொக்கு, கொத்சு, கிரேவி என பல வகையான உணவு வகைகளை நம்மால் செய்ய முடியும். இன்று சுவையான கத்தரிக்காய் கொத்சு எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம். Bihar Shocker: 60 வயது மூதாட்டி ஐவர் கும்பலால் கடத்திக்கொலை; மார்பை வெட்டி வீசி நடந்த பயங்கரம்.. அதிரவைக்கும் சம்பவம்.!
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - அரை கிலோ,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
புளி - சிறிதளவு.
தாளிக்க:
எண்ணெய் - தேவையான அளவு,
கடுகு - அரை கரண்டி,
காய்ந்த மிளகாய் - 4,
உளுந்து, கடலைப்பருப்பு - இரண்டு கரண்டி,
கருவேப்பிலை - சிறிதளவு,
கொத்சு:
காய்ந்த மிளகாய் - 12,
தனியா - இரண்டு கரண்டி,
கடலைப்பருப்பு - நான்கு கரண்டி,
உளுந்து - நான்கு கரண்டி.
செய்முறை: Thalapathy 68 Update: இன்று மாலை வெளியாகிறது தளபதி 68 படத்தின் முக்கிய அப்டேட்; விபரம் உள்ளே..!
முதலில் எடுத்துக் கொண்ட கடாயில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், கத்தரிக்காய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பின் கொத்சுக்கு வழங்கப்பட்டுள்ள பொருட்களை சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுத்து எடுத்து கொடுத்து வைத்துக் கொள்ளவும்.
இவை தயாரானதும் கடாயில் எண்ணெய் சேர்த்து தாளிக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை முதலில் சேர்த்துக் கொள்ளவும். பின் கத்தரிக்காய், அரைத்து வைத்துள்ள பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளற வேண்டும். சிறிதளவு தண்ணீர் விட்டு கொதி வந்ததும், புளி கரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை காத்திருக்க வேண்டும்.
இறுதியாக இறக்கும் தருவாயில் கொத்தமல்லி தலைகளை தூவி இறக்கினால் சுவையான கத்திரிக்காய் கொத்சு தயார்.