Rape & Murder (Photo Credit: Pixabay)

டிசம்பர் 31, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டம், ஜஹானா கிராமத்தில் 60 வயதுடைய மூதாட்டி வசித்து வருகிறார். கடந்த டிசம்பர் 25ம் தேதி மூதாட்டி தனது கணவருடன் உறவினர் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார். இவர்கள் இருவரும் அங்குள்ள நவாடா இரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வெளியே வந்துள்ளனர்.

கடத்தி செல்லப்பட்ட மூதாட்டி: மூதாட்டியின் கணவர் அங்குள்ள கடைக்கு சென்று இருக்கிறார். வழியில் ஊர்வலம் ஒன்று நடைபெற்றதால், எதிர்திசையில் இருந்து மூதாட்டியின் கணவரால் விரைந்து வர முடியவில்லை. இந்த சந்தர்பத்திற்குள் மூதாட்டியை மர்ம கும்பல் கடத்தி சென்றது. தனது மனைவியை காணாமல் தவித்துப்போன கணவர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். LSG Coach Justin Langer: ஐபிஎல் கிரிக்கெட்டுடன் ஒலிம்பிகை ஒப்பிட்ட லக்னோ அணியின் பயிற்சியாளர்; அணியுடன் இணைய காத்திருப்பதாக பேச்சு.! 

சடலம் அழுகிய நிலையில் மீட்பு: புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, அங்குள்ள கால்வாய் ஒன்றில் இருந்து மூதாட்டியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. உடலை மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

அதிர்ச்சி தகவல் அம்பலம்: முதற்கட்ட விசாரணையில், பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட உடலில் மார்பகங்கள் இல்லை. இதனால் மூதாட்டி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தபோது, ஐவர் கும்பல் மூதாட்டியை கடத்தி சென்றதை உறுதி செய்தனர். Thalapathy 68 Update: இன்று மாலை வெளியாகிறது தளபதி 68 படத்தின் முக்கிய அப்டேட்; விபரம் உள்ளே..! 

மார்பை வெட்டிக்கொலை, கூட்டுப்பாலியல் பலாத்காரம்: இந்த கும்பலுக்கு வலைவீசிய காவல் துறையினர் சுனில் யாதவ், விபின் யாதவ், பிந்து யாதவ், நிரஞ்சன் யாதவ் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். கரு யாதவ் என்ற குற்றவாளி தலைமறைவாக இருக்கிறார். அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மூதாட்டி கடத்தி செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார்.

அதிர்ச்சி தகவல்: பின்னர் அவரின் மார்பகத்தை வெட்டி வீசி, கழுத்தை அறுத்து கொடூர கொலை செய்த கும்பல், அவரின் உடலை அங்குள்ள கால்வாயில் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளது. மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல் துறையினர் முதலில் சுனில் யாதவின் அடையாளத்தை கண்டறிந்து, அவரை கைது செய்ததைத்தொடர்ந்து பிற குற்றவாளிகளையும் கைது செய்தனர்.