Semiya Biryani: மணமணக்கும் சேமியா சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? - விவரம் இதோ..!
பல்வேறு வகையான பிரியாணிகள் இருந்தபோதிலும், சேமியாவில் சுவையான பிரியாணி சமைப்பது பற்றி இதில் பார்க்கலாம்.
மார்ச் 13, சென்னை (Kitchen Tips): குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவாக பிரியாணி உள்ளது. பெரும்பாலும், பாஸ்மதி அரிசி பிரியாணி, சீரக சம்பா பிரியாணிகளை தான் நாம் அதிகம் உண்போம். ஆனால், சேமியாவை (Semiya Biryani Recipe) கொண்டு நாம் எப்படி பிரியாணி செய்யலாம் என்பதை பற்றி இதில் பார்ப்போம். Ponmagan Scheme: பெண்களுக்கு மட்டும்மில்லை.. ஆண்களுக்கும் இருக்கு சேமிப்புத் திட்டம்.. பொன்மகன் சேமிப்புத் திட்டம்..!
தேவையான பொருட்கள்:
சேமியா – 2 பாக்கெட்
சிக்கன் – 300 கிராம்
பெரிய வெங்காயம் – 4
தக்காளி – 4
பச்சை மிளகாய் – 6
பட்டை – 2
பிரியாணி இலை – 2
இஞ்சி பூண்டு விழுது – அரை கரண்டி
கிராம்பு – 4
ஏலக்காய் – 4
மிளகாய் தூள் – ஒரு கரண்டி
மஞ்சள் தூள், கரம் மசாலா – தலா அரை கரண்டி
கொத்தமல்லி புதினா – சிறிதளவு
தயிர் – 100 மில்லி
நெய் – 4 கரண்டி
எண்ணெய் – 8 கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து முதலில் கொதிக்க வைக்க வேண்டும். அதில், சேமியாவை சேர்த்து அதோடு இரண்டு கரண்டி எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து 70 சதவீதம் வேகவைக்க வேண்டும். வேகவைத்த சேமியாவை சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும். இதனால் சேமியா குலையாமல் உதிரி உதிரியாக இருக்கும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, பிரியாணி இலை, கிராம்பு மற்றும் ஏலக்காய் இவைகளை கொண்டு தாளிக்கவும். மேலும், நறுக்கிவைத்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கிய பிறகு புதினா கொத்தமல்லி சேர்த்து கிளறிவிட்டு, அதனுடன் தக்காளியை சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறிவிட்டு அதில் தயிரையும் ஊற்ற வேண்டும்.
பின்னர், எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளை அதில் சேர்த்து நன்கு வேகவைக்க வேண்டும். வெந்த பிறகு சேமியாவை சேர்த்து லேசாக கிளறிவிட்டு, நெய் கொஞ்சம் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கழித்து எடுத்து பார்த்தால் சுவையான மணமணக்கும் சேமியா பிரியாணி ரெடி.
சேமியாவை கொண்டு எவ்வாறு பிரியாணி செய்யலாம் என்பதை இதில் நாம் தெரிவித்துள்ளோம். இந்த முறையில் பிரியாணி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.