Thakkali Pongal Sadam: சுவையான, மதுரை பேமஸ் தக்காளி பொங்கல் செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
அவர்களுக்கான எளிய டிப்ஸ் முறையில் தக்காளி பொங்கல் செய்வது குறித்த தகவல் இன்று லேட்டஸ்ட்லி தமிழால் வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 17, மதுரை (Madurai News): ஒவ்வொரு இந்திய சமையலிலும் முக்கியமான இடம்பெறும் தக்காளி (Tomato), தன்னகத்தே பல நன்மைகளை கொண்டது ஆகும். இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, பி, பி6, கால்சியம், நார்சத்து, இரும்புசத்து, பாஸ்பிரஸ், இரும்புசத்து, மாவுசத்து, மெக்னீசியம், தாமிரம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. சூரிய வெப்பத்தில் இருந்து சருமத்தை பாதுகாப்பது, எலும்புகள் உறுதிப்படுத்த, புற்றுநோய் வராமல் தடுக்க, கண் பார்வையை மேம்படுத்த, சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்க, கூந்தல் வளர்ச்சிக்காக தக்காளி உதவுகிறது. இன்று தக்காளியில் மதுரை ஸ்டைலில் சுவையான தக்காளி பொங்கல் வைப்பது எப்படி என காணலாம். தக்காளி சாதத்தை (Tomato Rice Thakkali Sadam) போல தக்காளி பொங்கல் (Thakkali Pongal) என்பது மதுரை வட்டாரங்களில் வசிக்கும் சௌராஷ்ட்ரா மக்களிடம் பிரபலமான ஒன்று ஆகும்.
தக்காளி பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:
- அரிசி - 400 கிராம்,
- தக்காளி - 8 (பொடிப்பொடியாக நறுக்கியது),
- பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது),
- பச்சை மிளகாய் - 4,
- மிளகாய் தூள் - 2 கரண்டி,
- புதினா - சிறிதளவு அல்லது உங்களின் விருப்பத்திற்கேற்ப,
- இஞ்சி - சிறிதாக (சுண்டு விரலில் பாதியளவு),
- பூண்டு - 8,
- எண்ணெய் - 90 மில்லி,
- உப்பு - தேவையான அளவு,
- தண்ணீரின் அளவு - பசுமதிக்கு 300 மில்லி, பச்சரிசிக்கு 450 மில்லி, சீராக சம்பாவுக்கு 350 மில்லி.
- தக்காளி பொங்கல் மசாலா செய்ய - பிரியாணிக்கு சேர்க்கப்படும் பட்டை, லவங்கம், கிராம்பு உட்பட ரூ.5 க்கு விற்பனை செய்யப்படும் பாக்கெட் வாங்கி வறுத்து பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
செய்முறை:
- முதலில் எடுத்துக்கொண்ட குக்கரில் எண்ணெய் ஊற்றி தக்காளி பொங்கல் மசாலாவுடன், வெங்காயம் மற்றும் தக்காளியை அடுத்தடுத்து சேர்த்து நன்கு குழைய வதக்கி எடுக்க வேண்டும். பின் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மல்லி, கறிவேப்பில்லை தழை, மல்லி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
- இவை நன்கு வதங்கியதும், மசாலா, உப்பு ஆகியவை சேர்த்து கிளறி நீரை ஊற்றி ஒருகொதி வரை காத்திருக்கவும். பின் உப்பு மற்றும் காரம் ஆகியவை சரிபார்த்து அரிசி எடுத்துக்கொண்ட மதிப்புக்கு ஏற்ப நீரை சேர்த்து வேகவைத்து எடுக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் தக்காளி பொங்கலுடன் நெய்யில் முந்திரி வறுத்து சேர்த்தும் பரிமாறலாம்.
தக்காளி பொங்கல் பதிவு நன்றி: தாரா'ஸ் கிட்சன், மதுரை.