Pickles Cause Kidney Stones (Photo Credit : Youtube / Pixabay)

ஆகஸ்ட் 24, சென்னை (Health Tips Tamil): இன்றளவில் சிறுநீரக கற்களால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். நமது தவறான உணவு பழக்கவழக்கம் சிறுநீரகத்தில் கற்கள் வளர மிகப்பெரிய காரணமாக அமையும். அதேபோல தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் முக்கிய காரணியாக கருதப்படுகிறது. நாம் உடலுக்கு தேவையான தண்ணீரை குடித்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் உடல் பாதுகாக்கப்படும். நமது உடலில் உப்பு, சர்க்கரை அளவு போன்றவை சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை வெகுவாக கட்டுப்படுத்தும். அந்த வகையில் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்க நாம் ஒரு சில உணவுகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள் :

உணவில் சிட்ரஸ் நிறைந்த பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது கால்சியத்துடன் இணைந்து கற்கள் உருவாக்குவதை தடுக்கும். வாரம் ஒருமுறை அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை எலுமிச்சை சாறு குடிக்கலாம். ஆரஞ்சு பழம் போன்றவற்றை சாப்பிடலாம். கால்சியம் நிறைந்த பால், தயிர் போன்றவற்றையும் நாம் உணவாக எடுத்துக் கொள்ளலாம். அதேபோல தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை நீரை குடித்து சிறுநீர் வரும்போது அவ்வப்போது அதனை வெளியேற்றிவிட வேண்டும். மதுவைவிட மோசம்.. உயிரைப்பறிக்கும் ரீல்ஸ் மோகம்.. நிபுணர்கள் அதிர்ச்சிதரும் எச்சரிக்கை.! 

சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள் :

முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவற்றை வேக வைத்து சாப்பிடுவது நல்லது. அதேசமயம் சிறுநீரக கற்கள் வராமல் இருப்பதற்கு கீழ்க்காணும் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் அல்லது குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது. கீரை, பீட்ரூட், உருளைக்கிழங்கு, பாதாம், முந்திரி போன்றவை சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள் ஆகும். இதனை மிதமான அளவு எடுத்துக் கொள்வது நல்லது. இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் கால்சியம் நிறைந்த பால், தயிர் போன்றவற்றை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

ஊறுகாய் சாப்பிடுவதால் சிறுநீரக கல் ஏற்படும் அபாயம் :

அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளான கூல்ட்ரிங்ஸ், ஸ்வீட்ஸ், பேக்கரி பொருட்கள், நொறுக்கு தீனிகள் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. அதிக புரதம் நிறைந்த இறைச்சி, கடல் உணவுகள் ஆகியவற்றையும் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக உப்பு நிறைந்த சிப்ஸ், ஊறுகாய், சாஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவற்றையும், கலப்பட மசாலாக்களையும் தவிர்க்க வேண்டும். ஊறுகாயில் அதிக அளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. வெகுநாட்களுக்கு வீணாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக உப்பு சேர்த்து பதப்படுத்துவர். மேலும் காரமும் அதிக அளவு சேர்த்து எண்ணெயுடன் வைப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.

குறிப்பு: மேற்கூறிய அறிகுறிகள் / தகவல்கள் பொதுவானவையே. உங்களுக்கு அதுசார்ந்த உடல்நலக்குறைவு / உடல் ஆரோக்கியம் தொடர்பாக சந்தேகம் இருப்பின், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம். அவரின் அறிவுறுத்தலின் பேரில் தேவைப்பட்டால் உடல் பரிசோதனை செய்து, மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப செயல்படலாம்.