Belly Loss Exercise: தொப்பையை குறைக்க வேண்டுமா? – இதை செய்தால் போதும்..!
ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் மற்றும் நல்ல உடற்பயிற்சிகளின் மூலம் நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளலாம்.
மார்ச் 13, சென்னை (Health Tips): நம் அன்றாட வாழ்க்கையில் உணவு முறைகள் மாறிவிட்டன. இதனால், ஆரோக்கியமான உடல்நலம் இல்லாமல் பலருக்கும் உடல் எடை அதிகரிக்கிறது. பின்னர், தொப்பை (How to Loss Belly) ஏற்பட்டு அதை குறைக்க முயற்சி செய்தும் கொஞ்சம் கூட பயனளிக்காமல் போய்விடும். இதற்கு முக்கிய காரணமாக அனைவரும் நன்கு தூங்க வேண்டும். சரியான தூக்கம் இல்லாவிட்டால் பலவிதமான நோய்களுக்கு வழிவகுக்கும். ஒருவர் தினமும் 8 மணிநேரம் நன்றாக உறங்க வேண்டும். நல்ல உறக்கம் ஒருவரின் உடலை ஆரோக்கியமாகவும், எடை அதிகரிக்காமல் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும். Semiya Biryani: மணமணக்கும் சேமியா சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? – விவரம் இதோ..!
மேலும், இரவில் நன்றாக உறங்கும் நபர்களுக்கு உடல் ஆரோக்கியமாகவும், அதிகப்படியான கொழுப்பும் உடலில் தங்காது. நல்ல உறக்கம் எடுத்துக்கொள்பவர்களுக்கு நீரிழிவு மாதிரியான நோய்கள் வராது. தூக்கம் இல்லாமல் இருந்தால் உடல் எடை அதிகரித்து, வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனையை உண்டாக்கும். உடல் எடையை பேணி காக்க தினமும் 8 மணிநேரம் நன்றாக உறங்க வேண்டும்.
உடற்பயிற்சிகள்: நாம் தினமும் சில உடற்பயிற்சிகளை (Exercise) தொடர்ந்து செய்து வருவதன் மூலம், நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். குதித்தல், நடத்தல், ஹை நீஸ், ஸ்குவாட், கிரஞ்ஜஸ், லன்சஸ் மற்றும் ரிவர்ஸ் பிளாங்க் போன்ற உடற்பயிற்சிகளை செய்வது நல்ல பலனை தரும். ஆரம்பத்தில், 3 முறை 15 எண்ணிக்கையில் இதனை செய்யலாம். பின்னர், எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளலாம். இவ்வாறு உடற்பயிற்சிகளை செய்துவருவதால் உடல் எடையை குறைத்து, நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.