
ஜூன் 23, சென்னை (Health Tips Tamil): சர்க்கரை நோய் நமக்கு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உறுதியாகியும், அதில் சரிவர கவனம் செலுத்தாமல் இருந்தால் நினைவாற்றல் சிந்திக்கும் திறன் பாதிக்கப்படும் என மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். ரத்த சர்க்கரையின் அளவுக்கும், மூளையின் செயல்பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், சரியான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த தவறும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஞாபக மறதி, நினைவாற்றல் இழப்பு, முடிவெடுக்க இயலாமை, கவனிச்சதறல் போன்றவை இருக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். Gold Rate Today: கணிசமாக குறையும் தங்கம் விலை.. இன்றைய தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?.. விவரம் இதோ.!
மருத்துவர்களின் எச்சரிக்கை :
இந்த பிரச்சனை ஒரு சிலரை அல்சய்மர் (Alzheimer's disease) என்ற தீவிர நினைவாற்றல் இழப்புக்கும் கொண்டு செல்லும். நாம் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு மூளையின் ஆரோக்கியம் முக்கியம். சர்க்கரை பிரச்சனையை சரிவர கவனிக்காமல் விட்டால் அது மூளைக்குள் இருக்கும் அறிவாற்றலை திருடிச்செல்லும் என்று எச்சரிக்கும் ஆய்வாளர்கள், மூளையின் செயல்பாட்டை பாதுகாக்க நாம் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு சரியான உணவு பழக்கவழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். அதேபோல உடற்பயிற்சி போன்ற விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மதுப்பழக்கம் போன்றவற்றை கைவிடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.