ஆகஸ்ட் 17, சென்னை (Chennai News): சென்னை பல்லாவரத்தில் உள்ள ஞானமணிநகரில் வசித்து வரும் 44 வயதான நபர் அருண். இவர் மாற்றுத்திறன் கொண்டவர் ஆவார். தற்போது பெயிண்டிங் டிசைனராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வனஜா (வயது 38). தம்பதிக்கு திருமணம் முடிந்து மகன்களும் உள்ளனர். அருணின் மனைவி ஆன்லைன் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்த நிலையில், அதனை இரட்டிப்பாக்க யூடியூபில் வீடியோ பார்த்து அதிக பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார்.
கடனை கொடுக்க முடியாமல் தவிப்பு :
சமீப காலமாக அவரது பங்கும் உயர்ந்து வந்ததால், அதிக லாபம் கிடைக்கும் என எண்ணிய வனஜா கணவருக்கு தெரியாமல் ரூ.2.5 லட்சம் வரை கடன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார். இதன் மூலம் வந்த பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்த நிலையில், அவருக்கு லாபம் கிடைக்கவில்லை எனக்கு கூறப்படுகிறது. பங்குச்சந்தையில் கிடைக்கும் பணத்தை வைத்து கடனை அடைத்து குடும்பத்தையும் மேல்நோக்கி கொண்டு செல்லலாம் என நினைத்தவர் கடைசியில் கடனை கொடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். வானிலை: சென்னை, வேலூர், தென்காசி உட்பட 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை.!
கடன் செலுத்த முடியாமல் தற்கொலை :
தனியார் வங்கியின் கடன் செயலி மூலம் கடன் பெற்றவருக்கு தனியார் வங்கி ஊழியர்கள் கடனை திருப்பி செலுத்த நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனமுடைந்த வனஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வனஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இறுதியாக கணவருக்கு அனுப்பிய ஆடியோ :
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிந்து முதற்கட்டமாக விசாரித்ததில் அவர் தற்கொலைக்கு முன்னதாக பதிவு செய்த ஆடியோக்கள் இருந்துள்ளன. ஆடியோவில், "தனியார் வங்கி மூலம் நான் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கினேன். கடனை திருப்பி செலுத்திவிடலாம் என நினைத்தேன். ஆனால் செலுத்த முடியாததால் கடனை கேட்டு ஊழியர்கள் நெருக்கடி கொடுத்தனர். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்" என தனது கணவருக்கு வாட்ஸ்அப் செயலி மூலமாக அவர் ஆடியோவை அனுப்பிவிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3