Holi Color Remove Tips: ஹோலி பண்டிகை கலர் கையை விட்டு போகலையா?.. சிம்பிள் ட்ரிக்ஸ்.. இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!
உலகெங்கும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையில் பயன்படுத்தப்படும் வர்ணங்கள் உடலை விட்டு நீங்கி செல்ல, எளிமையான யோசனை குறித்த காணொளி இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 26, மும்பை (Mumbai): இந்தியா, வங்கதேசம், பிஜி, தென்னாபிரிக்கா உட்பட பல நாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள், ஹோலி பண்டிகையை (Holi Festival) கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றை உணர்ந்து திருவிழாவாக கவனிக்கப்படும் ஹோலி அன்று, மக்கள் தங்கள் உறவினர் மற்றும் நண்பர்கள் மீது கலர்பொடிகளை தூவி கொண்டாட்டங்களை சிறப்பிப்பர். வடமாநிலங்களில் மட்டும் நடைபெற்று வந்த ஹோலி பண்டிகை, தற்போது பல்வேறு மாநிலங்களிலும் கோலாகலமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. RCB Vs PBKS Highlights: ஐபிஎல் 2024 தொடரில் முதல் வெற்றிக்கனியை சுவைத்தது பெங்களூர் அணி; விராட் கோலி அசத்தல் ஆட்டத்தால் கொண்டாட்டம்.!
வர்ணத்தின் நிறமியால் வரும் பிரச்சனை: பொதுவாக ஹோலி பண்டிகையின்போது வர்ணங்களை கொண்டு பலரும் தங்களின் நண்பர்கள், உறவினர்கள் மீது பூசி விளையாடுவார்கள். இந்த வர்ணங்களின் நிறம் அவர்களின் கை, முகம் ஆகிய பாகங்களில் இருந்து வெளியேற குறைந்தபட்சம் 3 நாட்கள் முதல் ஒரு வாரம் வரையிலும் ஆகும். அதில் ஏற்றப்பட்டுள்ள நிறமிகள் உடலுடன் ஒன்றிப்போவதால் இவ்வுளவு நாட்கள் ஆகும். இதனை உடனடியாக சரிசெய்ய இளைஞர் ஒருவர் செய்த காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. Holi Celebration: ஹோலி கொண்டாட்டத்தின் பெயரில் விதிமீறல்.. இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் வீடியோ வைரலானதால் காவல்துறை விசாரணை.!
நிமிடத்திற்குள் மாயாஜாலம்: அதன்படி, இளைஞர் முதலில் ஷாம்புவுடன், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ஈனோ ஆகியவற்றை சேர்ந்து நன்கு நிறமிகள் உள்ள இடத்தில் தேய்த்து ஒருசில நொடிகள் காத்திருந்து கைகளை கழுவுகிறார். அவரின் கையில் இருந்த வர்ணங்களின் நிறமிகளை மறைந்துபோகிறது. இந்த யோசனை தற்போது ஹோலி பண்டிகையை கொண்டாடியோருக்கு உதவும் என்பதால், அது வைரலாகி வருகிறது.