Alejandra Rodríguez Won Miss Universe Buenos Aires: 60 வயதில் அழகிப்பட்டம் வென்ற பெண்மணி; ஆச்சரியப்படவைக்கும் மூதாட்டியின் இளமை.!

வயதானபோதும் தனது அழகு மற்றும் இளமையை வைத்து பலரையும் வியக்கவைத்த மூதாட்டி, அழகிப்பட்டம் வென்று சாதனை படைத்துள்ள நிகழ்வு அர்ஜென்டினாவில் நடந்துள்ளது.

Alejandra Rodríguez (Photo Credit: @NDTV X)

ஏப்ரல் 27, புஏனோஸ் அரிஸ் (World News): அர்ஜென்டினா நாட்டின் புஏனோஸ் அரிஸ் தலைநகரில், ஆண்டுக்கு ஒருமுறை அழகிப்போட்டி (Miss Buenos Aries) நடைபெறும். பரந்த அளவில் நடைபெறும் இந்த அழகிப்போட்டியில், 18 வயது முதல் 73 வயதுக்குள் இருக்கும் பெண்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களின் மதிப்பெண் வாயிலாக மிஸ் புஏனோஸ் அழகி தேர்வு செய்யப்படுவார். Health Benefits of Garlic: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அற்புதமான மருந்து.. நோய்களை விரட்டும் பூண்டு..!

30 வயதை போல தோற்றமளிக்கும் பெண்: அந்த வகையில், நடப்பு ஆண்டில் நடைபெற்ற அழகிப்போட்டியில், அங்குள்ள லா பிளாட்டா பகுதியை சேர்ந்த 60 வயது பெண்மணியான அலெஜாண்ட்ரா ரோட்ரிகுயஸ் (Alejandra Rodriguez) கலந்துகொண்டார். இவர் போட்டியில் கலந்துகொண்டவர்களில் வயது கூடியவர் எனினும், அவரின் தோற்றத்தை பார்த்தால் 30 வயதுடைய பெண்ணை போல தோற்றமளிப்பார். Vegetable Wheat Bread Recipe: வெஜிடபிள் கோதுமை ரொட்டி செய்வது எப்படி..! விவரம் உள்ளே..! 

பத்திரிகையாளரின் சாதனை: இவருக்கு நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் பலரும் மதிப்பெண்களை வாரி வழங்கிட, இறுதியில் போட்டியின் முடிவில் பெண்மணி மிஸ் புஏனோஸ் அரிஸ் அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அலெஜாண்ட்ரா வழக்கறிஞர் மற்றும் பத்திரிகையாளராக செயல்பட்டு வருகிறார். வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதற்கு உதாரணமாக பெண்மணி அழகிப்பட்டம் வென்றுள்ளார்.