Garlic (Photo Credit: wikipedia)

ஏப்ரல் 26, சென்னை (Health Tips): வெள்ளைப் பூண்டின் நன்மைகளை அறியாமல், பழக்கத்தில் தான் நம்மில் பெரும்பாலானோர் பூண்டை (Garlic) அன்றாட உணர்வில் சேர்த்துக் கொள்கிறோம். உலகத்தையே புரட்டிப் போட்ட கொரோனா தொற்று, இந்தியர்களை அந்த அளவுக்கு பாதிக்காததற்கு காரணம் இந்தியர்கள் உடலில் இருந்த நோயெதிர்ப்பு சக்தி என்று ஆய்வுகளில் தெரிய வந்தது. இதற்கு முக்கிய காரணம் இஞ்சி, பூண்டு, மஞ்சள் போன்ற நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் விஷயங்களை, இந்தியர்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது தான் என்கின்றனர் மருத்துவர்கள். அந்த வகையில் வெள்ளைப் பூண்டு செய்யும் அற்புதங்களை நீங்கள் தெரிந்துகொண்டால், எந்நாளும் அதை உணவுத் தட்டில் ஒதுக்கி வைக்க மாட்டீர்கள்.

நோய்களை விரட்டும் பூண்டு: பூண்டு இதய தசைகளை வலுவாக்கி, இதய ரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர விடாமல் தடுக்கிறது. பூண்டில் உள்ள அல்லில்சிடின் ஆசிட், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. பூண்டில் வைட்டமின் -6, துத்தநாகம், கால்சியம், நார்ச்சத்துக்கள், மக்னீசியம், செலினியம், மாங்கனீசு, உள்ளன. இதில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் அழற்சி பாதிப்பு, பூஞ்சை நோய் தடுப்பு பண்புகளை கொண்டுள்ளது. Veera Dheera Sooran Movie Update: கெட்டப் குமாரின் அடுத்த படம்.. வீர தீர சூரனான விக்ரம் படத்தின் அப்டேட்..!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பூண்டு உதவும். இது அதிக கலோரிகளை எரிக்கும் தன்மை உடையது. பூண்டு உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. தினமும் தூங்கும் முன் பாலில் பூண்டை கொதிக்க வைத்து குடித்து வந்தால், உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால், கெட்ட கொழுப்புகள் கரையும்.