ஏப்ரல் 26, சென்னை (Kitchen Tips): வெஜிடபிள் கோதுமை ரொட்டி (Vegetable Wheat Bread) ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு ஆகும். இதில், சத்து நிறைந்த காய்கறிகளை சேர்த்து செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவற்றை எப்படி செய்வது என்பதனை இதில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 300 கிராம்

சின்ன வெங்காயம், கேரட் - தலா 250 கிராம்

பீட்ரூட் - 150 கிராம்

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

கறிமசால், மிளகாய்த்தூள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு. School Teachers Suspend: பள்ளி மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம்; தலைமை ஆசிரியை உட்பட இருவர் பணியிடை நீக்கம்..!

செய்முறை:

முதலில் கேரட், பீட்ரூட் ஆகிய இரண்டையும் துருவி வைத்துக்கொள்ளவும். பின்னர், கோதுமை மாவில் (Vegetable Godhumai Roti) துருவிய கேரட் மற்றும் பீட்ரூட் ஆகியவற்றை போட்டு, மிளகாய்த்தூள், கறிமசால், தேவையான அளவில் உப்பு சேர்த்து இவற்றை நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதில், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைத்துக்கொள்ளவும். சுமார் அரை மணிநேரம் கழித்து, அதனை ரொட்டி போல தட்டி வைத்துக்கொண்டு, ஒவ்வொன்றாக தோசை கல்லில் போட்டு சுட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான வெஜிடபிள் கோதுமை ரொட்டி தயார்.