Lyme Disease: கேரளாவில் உறுதியானது பூச்சிகளால் பரவும் லைம் நோய்: மரணமும் ஏற்பட வாய்ப்பு..!

நரம்பு மண்டலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி, மரணத்தை வழிவகுக்கும் லைம் நோய் கேரளாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Lyme Disease (Photo Credit: @vinodscaria / @GetNewsd X)

மார்ச் 13, எர்ணாகுளம் (Kerala News): கேரளா மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையின் மீது அமையப்பெற்று, இயற்கை அழகு கொஞ்சும் வகையில் இருந்தாலும், "அழகு தன்னகத்தே ஆபத்தையும் கொண்டிருக்கும்" என்ற பழமொழி சொல்லுக்கு ஏற்ப, அவ்வப்போது ஏற்படும் வைரஸ் காய்ச்சல் உட்பட நோய்களால் பாதிக்கப்படும். இதனால் அம்மாநில சுகாதாரத்துறை எப்போதும் விழிப்பு நிலையில் செயல்படும்.

லைம் நோய் பாதிப்பு: இந்நிலையில், கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம், கூவப்பாடி பகுதியில் 56 வயது ஆணுக்கு போரேலியா பாக்டீரியாவால் ஏற்படும் லைம் நோய் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது. முதலில் அவர் அரிப்பு போன்று தோன்றியதை இயல்பாக எண்ணி இருந்துள்ளார். பின் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு மருத்துவமனைக்கு வந்தபோது லைம் (Lyme Disease Confirmed in Kerala) நோய் பாதிக்கப்பட்டது உறுதியானது. 56 வயது நபரின் இரத்த மாதிரிகள் பெங்களூரில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போது இது உறுதி செய்யப்பட்டுள்ளது. Dhoni Autograph to Fans: "ரசிகர்களுடன் நிரந்தரமான பந்தத்தில் கையெழுத்திடுகிறேன்" - நேரில் பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கிய தல தோனி.! 

சில அறிகுறிகள்: கடந்த டிசம்பர் 06ம் தேதி பாதிக்கப்பட்ட நோயாளி அதிக காய்ச்சலுடன், வலது முழங்காலில் வலி மற்றும் வீக்கம், கழுத்தில் விறைப்பு, விதைப்பையில் புண்கள் ஆகிய அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். கையில் எலுமிச்சை பழம் அளவில் சிவந்த அடையாளமும் இருந்துள்ளன. அவருக்கு நடந்த மருத்துவ பரிசோதனைக்கு பின், மாநில சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் அவரின் மாதிரிகள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்பின்னரே இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மரணமும் வரலாம்: இதனையடுத்து, அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் டிசம்பர் 26ம் தேதி மருத்துவமனையில் பூரண நலன் பெற்று வீடுதிரும்பினார். பொரேலியா பர்க்டோர்ஃபெரி (Borrelia Bacteria) என்ற பாக்டீரியா காரணமாக லைம் நோய் ஏற்படுகிறது. இது பூச்சிகளளாலும் பரவும். நரம்பு மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்ட இந்நோய், மரணத்திற்கும் வழிவகை செய்யலாம் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலர்ஜி போன்றவையுடன் மேற்கூறிய பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது.