International Day for Biological Diversity 2024: இயற்கையுடனான நமது உறவு.. உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினம்..!

உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினம் மே மாதம் 22 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

International Day for Biological Diversity (photo Credit: Pixabay)

மே 22, புதுடெல்லி (New Delhi): ஐக்கிய நாடுகள் சபை பல்லுயிர் பெருக்கம் தொடர்பாக பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் புரிதல் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக கடந்த 2000 ஆம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினம் (International Day for Biological Diversity) மே மாதம் 22 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. உணவு முறைகள் வாழிடங்கள் போன்ற பல்வேறு அம்சங்களில் கணக்கற்ற வகையில் வேறுபடுகின்ற ஏராளமான உயிரினங்கள் ஒன்றுக்கொன்று உகந்ததாக இப்போது வாழ்ந்து வருகின்றன.

இயற்கை மக்களுக்கு அளித்த கொடை முழுமையாக மாற்றத்தக்கதல்ல என்பதை நாம் உணர வேண்டும். இவற்றில் சிலவற்றை நம்மால் எந்த வகையிலும் மாற்றியமைக்க முடியாது. மக்களின் உடல் மற்றும் மன நலனுக்கு தேவையான பல்வேறு அடிப்படை பொருட்களான உணவு, எரிசக்தி, மருந்துப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய வளங்களையும், கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் இயற்கை முக்கியப் பங்கு வகிக்கிறது. Morgan Midsummer: ஸ்போர்ட்ஸ் கார் மாடலை தழுவிய மிட்சம்மர் கார் வெளியீடு.. வெறும் 50 கார் மட்டுமே தயாரிப்பு..!

மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா அதிக அளவிலான சிற்றினங்களைக் கொண்ட நாடாகக் திகழ்கின்றது. புவியில் நீடித்த வாழ்க்கைக்கு தேவையான உயிரியல் பன்முகத்தன்மையின் முக்கியப் பங்கு குறித்தும், உள்ளார்ந்த மற்றும் நீடித்த வளர்ச்சி குறித்து நமக்கு நினைவூட்டவும் இந்நாள் பயன்படுகிறது. எனவே, நம்மால் இயன்ற அளவுக்கு உயிரியல் பன்முகத்தன்மையை பேணி பாதுகாத்து, மேம்படுத்துவது அவசியம்.