![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1716354643Morgan%2520Midsummer-380x214.jpeg)
மே 22, புதுடெல்லி (New Delhi): உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்களான மோர்கான் மோட்டார் கம்பெனி (Morgan Motor Company)-யும், பினின்ஃபரினா (Pininfarina)-வும் இணைந்து இரண்டு இருக்கைகளை மட்டுமேக் கொண்ட கார் மாடலை, மிட் சம்மர் (Midsummer) எனும் பெயரிலே வெளியீடு செய்திருக்கின்றன. இந்த கார் மாடல் பழைய விண்டேஜ் கார்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இந்த கார் விற்பனைக்கு என 50 யூனிட்டுகளை மட்டுமே இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. Vaikasi Visakam 2024: இன்று முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம்: பக்தர்கள் வெள்ளம், அரோகரா கோஷத்தால் களைகட்டும் திருச்செந்தூர்..!
இந்த காரில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும். மோர்கான் நிறுவனத்தின் முதன்மையான தயாரிப்பான பிளஸ் சிக்ஸ் (Plus Six) என்ற ஸ்போர்ட்ஸ் கார் மாடலை தழுவியே இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த கார் இந்திய மதிப்பில் ஒவ்வொரு யூனிட்டும் ரூ. 2.11 கோடிக்கே விற்கப்பட்டு இருக்கின்றன. மேலும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பகழ்பெற்ற எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அந்த எஞ்சின் அதிகபட்சமாக 340 எச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதனால் மணிக்கு 267 கிமீ வேகத்தில் செல்ல முடியும்.