Narasimha Jayanthi 2024: எதிரிகள் தொல்லையை வேரறுக்கும் நரசிம்மர் வழிபாடு; 2024 நரசிம்ம ஜெயந்தி நல்ல நேரம், வழிபாடு முறைகள் விபரம் இதோ.!
பல யுகங்களாக மண்ணுலகை பாதுகாத்து, ஒவ்வொரு உயிர்களுக்கும் படியளக்கும் தெய்வங்கள் தொடர்ந்து நம்மை காத்து வருகிறது. ஒவ்வொரு தெய்வங்களின் அவதாரமும் மக்களை அதர்மத்தின் பெயரில் அக்கிரமம் செய்து வந்தவர்களை அழித்து மக்களை காத்து இருக்கிறது. இதனாலேயே அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் போற்றப்படுகிறார்கள்.
மே 21, சென்னை (Chennai): Narasimha Jayanthi 2024 Images & Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Narasimha Jayanthi:
நரசிம்மர் அவதாரம் (Narasimha Avatharam) பற்றி சுருக்கமாக: பூவுலகில் பிறந்து மூன்று உலகங்களையும் பிரம்மாவின் சாகா வரத்தால் கொடுங்கோல் ஆட்சி செய்து, தன்னையே கடவுளாக மக்கள் வணங்க வேண்டும் என சுற்றித்திரிந்து வந்த அரக்கன் ரணியன், தனது சொந்த மகன் பிரகலாதன் விஷ்ணுவின் மந்திரத்தை உச்சரித்து வந்ததால் அவரை கொலை செய்ய பல வழிகளை தீட்டி தோல்வி அடைகிறான். இறுதியாக, அணுவுக்குள் அணுவாக இருக்கும் எம் இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என ஸ்ரீமன் நாராயணன் பக்தர் பிரகலாதன் கூற, தூணை உடைத்த ரணியனை வேட்டையாட சிங்க முகத்துடன், மனித உடல் அமைப்புடன் பராக்கிரம ஆவேசத்துடன் தோன்றிய நரசிம்மர் அசுரன் ரணியனை வீட்டின் நிலைவாசலில் அமர்ந்து உடல் துண்டாக்கி கொன்று பக்தர்களை காப்பாற்றி பின் சிவன்-பார்வதி அருளால் சந்தமாகினார். இவ்வுளவு மகிமை கொண்ட நரசிம்ம அவதாரம், விஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. Narasimha Jayanthi 2024: விஷ்ணுவின் அவதாரத்தில் மிக முக்கியமானது நரசிம்ம அவதாரம்; முக்கியத்தும் என்ன? ஆன்மீக நெஞ்சங்களே தெரிஞ்சிக்கோங்க.!
வரங்களை அள்ளிக்கொடுக்கும் குணம் கொண்டவர்: அதர்மம் எங்கெல்லாம் தலைதூக்குகிறதோ, அங்கெல்லாம் அதர்மத்தை ஒழிக்க நான் பிறப்பேன் என்பது விஷ்ணுவின் வாக்கு. அவரின் வாக்குப்படி அதர்மம் தலைவிரித்து ஆடினாலும், இறுதியில் தர்மத்தை நிலைநாட்ட அவர் அவதரித்து அதனை நிலைநாட்டுவார். அவரின் 10 அவதாரங்களில், ஒவ்வொரு அவதாரமும் அதனை நோக்கிய பயணத்துடன் இருக்கும். அந்த வகையில், விஷ்ணுவின் அவதாரங்களில் போற்றுதலுக்குரிய முக்கிய அவதாரமான நரசிம்ம அவதாரம், வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி, சுவாதி நட்சத்திரம், பிரதோஷ காலம் சேரக்கூடிய நேரத்தில் நடந்தது என்பது ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் நரசிம்மரை வழிபடவும், அவரின் போற்றுதலுக்குரிய செயலை எதிர்கால சந்ததிகளுக்கு தெளிவுபடுத்தவும் நரசிம்ம ஜெயந்தி (Narasimha Jayanthi Rituals) கொண்டாடப்படுகிறது. கேட்டதை கேட்டதும் கொடுக்கும் வல்லமை கொண்ட நரசிம்மர், அவரை மனமுருகி வேண்டினோருக்கு உடனடியாக வரத்தை அள்ளிக்கொடுக்கும் குணம் கொண்டவர். அதே வேளையில், எதிரிகளின் செயல்பாடுகளை வேரறுக்க வல்லவர். World Bee Day 2024: "நாங்க சுத்தலைன்னா பூமி சுத்தாது" உலக தேனீ தினம்..!
2024 நரசிம்மர் ஜெயந்தி: இந்த ஆண்டுக்கான நரசிம்மர் ஜெயந்தி 21.5.2024 செவ்வாய்க்கிழமை அன்று மாலை நேரத்தில் சதுர்த்தி திதி, சுவாதி நட்சத்திரம், பிரதோஷம் மூன்றும் சங்கமிக்கும் மாலை நேரத்தில் சிறப்பிக்கப்படுவது நல்லது. கோவில்களை பொறுத்தமட்டில் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் என்பது இருக்கும். வீட்டில் பூஜைகள் செய்ய நினைக்கும் பக்தர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 05:30 மணிமுதல் 06:30 மணிக்குள் வழிபாடுகளை நிறைவு செய்யலாம். பெருமாளின் உருவம் கொண்ட படத்தை வைத்து வணங்குவது, லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு துளசி மாலை சாற்றி வைத்து வீடுகளில் வழிபடலாம். லட்சுமி நரசிம்மரின் வழிபாடு கடன் தொல்லையை நீக்க உதவும், எதிரிகளின் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். நரசிம்மரை மனமுருகி வேண்டுவது நினைத்த காரியங்களை கைகூட உதவும்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)