அக்டோபர் 15, சென்னை (Festival News): 2025 தீபாவளி பண்டிகையை கொண்டாட இன்னும் ஒருசில நாட்களே எஞ்சி இருக்கின்றன. வெள்ளி, சனிக்கிழமை முதல் தீபாவளி (Deepawali 2025) கொண்டாட்டங்கள் களைகட்டும் என எதிர்பார்க்கபடுகிறது. சென்னை, பெங்களூர் போன்ற வெளியூர்களில் இருந்து பணியாற்றி வரும் பலரும், தீபஒளி (Diwali) பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் வருகின்றனர். விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில், பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசுகளை ஏற்படுத்தாத பட்டாசுகளை அனுமதிக்கப்பட்ட நேரங்களில் உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நாளை உங்களின் நண்பர்கள், குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ லேட்டஸ்ட்லி தமிழ் வாழ்த்து செய்திகளை வெளியிடுகிறது. Govt Job: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தேர்வின்றி சொந்த மாவட்டத்தில் அரசு வேலை.. கிராம ஊராட்சி செயலர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
1) உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இதயம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள்!

2) இனிப்பை போல உங்கள் வாழ்வும் இனிக்கட்டும்! தித்திக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

3) Wishing you a Diwali filled with light, joy, and warmth! May this festival bring endless happiness to your life!

தீப ஒளி பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை லேட்டஸ்ட்லி தமிழ் தெரிவிக்கிறது.